தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடி வாிப்பகிா்வு வழங்கிய மத்திய அரசு.. உத்தரப்பிரதேசத்திற்கு அதிக நிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிற்கான ரூ.4,466 கோடி வாிப்பகிா்வு தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. 28 மாநிலங்களுக்கான வாிப்பகிா்வு தொகையை மத்திய அரசு விடுத்துள்ள நிலையில் அந்த பட்டியலில் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.19,208 கோடி பீகாருக்கு ரூ.10,845 கோடி மத்தியபிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் மூலதன மற்றும் வளர்ச்சி செலவினங்களை விரைவுபடுத்தும் வகையில் வரிப்பகிர்வு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்களை விரைவுபடுத்துவதற்காக ஆகஸ்ட் 10-ஆம் தேதி தரப்பட வேண்டிய தொகையை ஆகஸ்ட் 1-ஆம் தேதியே முன்பணமாக மத்திய அரசு வழங்கியுள்ளது.

Central Government releases Rs 4 466 crore in tax share to Tamil Nadu UP receives higher funds

மாநில அரசுகள் மூலதனச் செலவினங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் விரைவுபடுத்துவதற்கு உதவும் வகையில், வழக்கமாக ஆகஸ்ட் 10 அன்று வழங்கப்படும் மாதந்திர தவணைக்கு முன்னதாகவே, மத்திய அரசு இன்று ரூ.1,09,019 கோடியை கூடுதல் வரிப்பகிர்வுத் தொகையாக மாநில அரசுகளுக்கு விடுவித்துள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, ஆகஸ்ட் 1 அன்று விடுவிக்கப்பட்ட இந்தத் தொகையானது, "ஆகஸ்ட் 10, 2026 அன்று விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான மாதாந்திர வரிப்பகிர்வுக்குக் கூடுதலான ஒன்றாகும்".

"மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சிச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்காக, அவர்களின் நிதி நிலையைப் பலப்படுத்துவதில் இந்திய அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு ஏற்பவே இந்த நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது" என்று நிதி அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் பெற்ற நிதிப் பங்கீடு (ஆகஸ்ட் 2026):

மத்திய வரிகள் மற்றும் வரிகளின் நிகர வருவாயில் நிதி அமைச்சகத்தின் மாநில வாரியான பங்கீட்டின்படி:

உத்தரப் பிரதேசம்: அதிகபட்சமாக ரூ. 17,908 கோடி

மேற்கு வங்காளம்: ரூ. 7,986 கோடி

மகாராஷ்டிரா: ரூ. 7,022 கோடி

ராஜஸ்தான்: ரூ. 6,800 கோடி

பீகார்: ரூ. 5,893 கோடி

தமிழ்நாடு: ரூ. 4,600 கோடி

குஜராத்: ரூ. 4,074 கோடி

ஆந்திரப் பிரதேசம்: ரூ. 4,037 கோடி

மத்தியப் பிரதேசம்: ரூ. 3,810 கோடி

சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

கோவா (ரூ. 399 கோடி), சிக்கிம் (ரூ. 203 கோடி), மிசோரம் (ரூ. 612 கோடி), நாகாலாந்து (ரூ. 824 கோடி), மற்றும் திரிபுரா (ரூ. 699 கோடி) உள்ளிட்ட சிறிய மாநிலங்களும் அவற்றின் உரிய பங்குகளைப் பெற்றிருக்கின்றன.


வரிப்பகிர்வு என்பது என்ன

நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசின் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய வரி வருவாயில் குறிப்பிட்ட பங்கை மாநிலங்களுக்குப் பிரித்தளிப்பது அரசியல் சாசன ரீதியாக கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. அந்த வகையில் நிதி பரிமாற்றங்கள் மாநிலங்களுக்கான நிபந்தனையற்ற வருவாயின் முக்கிய ஆதாரமாக விளங்குவதோடு, உள்கட்டமைப்பு, சமூக நலன் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்களுக்கும் ஆதரவளித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+