வங்கி ஊழியர்களே நினைத்த பார்க்காத திருப்பம்.. ஊதிய உயர்வு முதல் சலுகை வரை எல்லாமே மாறப்போகிறது?
சென்னை: நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை நான்காகக் குறைக்கும் ( வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை) மத்திய அரசின் நடவடிக்கையால் என்ன மாதிரியான சிக்கல்கள் மற்றும் பாதகங்கள் வரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை 4 மிகப்பெரிய வங்கிகளாக மாற்றும் திட்டத்தினை மத்திய அரசு முன்னணி தீர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 12 வங்கிகளை ஒருங்கிணைத்து நான்கு பெரிய வங்கிகளாக மட்டும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு விரும்புவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும், பெரிய, உலகத் தரம் வாய்ந்த வங்கிகளை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தான் மத்திய அரசு 12 வங்கிகளை நான்கு வரிகளாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறதாம். இதில் பல முக்கியமான பாதகங்களும் சிக்கல்களும் எழ வாய்ப்புள்ளது.
வங்கிகளை ஒன்றிணைப்பதால் பல உள்நாட்டு மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் எழும். முதல் பிரச்சனை வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது. வங்கி ஊழியர்கள் மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும். வங்கிகள் இணைக்கப்படும்போது, ஒரே பணிக்கு அதிக ஊழியர்கள் இருப்பது தவிர்க்க முடியாதது. இது ஆட்குறைப்பு மற்றும் ஊழியர்களின் பணி இடமாற்றங்களுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.
பதவி உயர்வு பாதிப்பு
12 வங்கிகளில் பணியாற்றியவர்கள் நான்கு வங்கிகளில் பணியாளர்களாக இணைந்த பின்னர் அவர்களின் பணிமூப்பு அதாவது சீனியாரிட்டி குறைக்கப்படலாம். இதனால் ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகள் குறையும் என்ற அச்சம் உள்ளது
இதனால் வேலை இழப்பு மற்றும் பணிச்சூழல் மாற்றங்கள் பற்றிய அச்சத்தால் வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் ஈடுபட அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பொதுவாகவே வங்கி ஊழியர்கள், இப்படி வங்கிகளை இணைக்கும் செயல்களுக்கு கடந்த காலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்கள்
12 பொதுத்துறை வங்கிகளை நான்கு பெரிய வங்கிகளாக இணைக்கும் போது வங்கிகளின் சேவை தொடர்ச்சியில் அவ்வப்போது சிக்கல்கள் வரலாம். வாடிக்கையாளரின் கணக்கு எண், வாடிக்கையாளர் ஐடி, IFSC குறியீடு மற்றும் செக் புத்தகம் ஆகியவை மாற்றப்படும். இந்த மாற்றங்களை வாடிக்கையாளர்கள் தங்கள் அனைத்து நிதி நிறுவனங்களுடனும் தொடர்புகொண்டு புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், இது கால விரையம் மற்றும் சிரமத்திற்கு வழிவகுக்கும்.
வங்கி கிளைகள் குறையும்
அதேபோல் 12 பொதுத்துறை வங்கிகள் நான்கு வங்கிகளாக குறையும் போது, இணைப்பின் ஒரு பகுதியாக, நெருக்கமான இடங்களில் உள்ள கிளைகளும், லாபம் குறைவாக உள்ள கிராமப்புறக் கிளைகளும் மூடப்படும் அபாயங்கள் உள்ளது. இது தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்குச் சேவைகள் கிடைப்பதையே கேள்விக்குறியாகி விடும்.
வாராக் கடன்
பலவீனமான வங்கிகளை வலுவான வங்கிகளுடன் இணைக்கும்போது, பலவீனமான வங்கிகளின் வாராக்கடன் சுமை வலுவான வங்கிக்கு மாற்றப்படுகிறது. இதனால் இணைந்த வங்கியின் ஒட்டுமொத்த நிதி ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்.
தொழில்நுட்ப சவால்கள்
இணைக்கப்படும் வங்கிகள் வெவ்வேறு மென்பொருள் தளங்களில் செயல்பட வாய்ப்புள்ளது. இந்தத் தொழில்நுட்ப அமைப்புகளை ஒன்றிணைக்க அதிக முதலீடு, கவனமான திட்டமிடல் மற்றும் அதிக காலம் வங்கிகளுக்கு நிச்சயம் தேவைப்படும்.
வலுவான வங்கிகளை பலவீனப்படுத்தும்
12 பெரிய பொதுத்துறை வங்கிகளை நான்கு மிக பெரிய வங்கிகளாக மாற்றும்போது , அதாவது பெரிய வங்கிகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் பலவீனமான வங்கிகளால் பலமான வங்கிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது பற்றி சில வல்லுநர்கள் கூறும்போது , இந்த இணைப்பு முறை, வலுவான வங்கிகளைப் பலவீனப்படுத்தி ஒட்டுமொத்த வங்கி அமைப்பையே குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
நிர்வாகச் சிக்கல்கள்
ஒவ்வொரு வங்கிக்கும் அதன் தனிப்பட்ட பணியிடக் கலாச்சாரம் மற்றும் நிர்வாக நடைமுறைகள் உள்ளன. இந்த வெவ்வேறு கலாச்சாரங்களை ஒருங்கிணைப்பது மிகவும் சவாலானது.
பெரிய அமைப்புகள் உருவாகும்போது, அதனை நிர்வாகம் செய்வது மற்றும் அன்றாடச் செயல்பாடுகளுக்கு இடையேயான தூரம் அதிகரிக்கலாம்.
சுருக்கமாக, வங்கிகளை நான்காகக் குறைக்கும் முயற்சி, ஒருவேளை பெரிய வங்கிகளை உருவாக்க உதவலாம். ஆனால், குறுகிய காலத்தில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் பெரிய சிக்கல்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications