மற்ற மெட்ரோ திட்டங்களுக்கு ஓகே! ஆனால் சென்னைக்கு மட்டும் நிதி நோ.. என்ன காரணம்? மத்திய அரசு விளக்கம்
சென்னை: நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சென்னை மெட்ரோவுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து திமுக எம்பி தயாநிதி மாறான் கேள்வி எழுப்பினார். அதற்கு சென்னை மெட்ரோ 2ம் கட்டம் என்பது மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுதாகவும் இதனால் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் எம்பிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னையில் இப்போது மெட்ரோ 2ம் கட்ட கட்டுமானம் நடந்து வரும் நிலையில், இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று திமுக தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கிடையே திமுக எம்பி தயாநிதி மாறான் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
கேள்வி: அதாவது சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியின் நிலை என்ன? தாமதத்திற்கு காரணம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், பிற மாநிலங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்றும் வழங்கப்பட்ட நிதி குறித்த விபரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சி இணையமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார்.
மாநில அரசின் திட்டம்: சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் என்பது தற்போது மாநில அரசுன் திட்டமாகவே செயல்படுத்தப்படுவதாகவும் இதனால் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மாநில அரசே செலவு செய்வதாகவும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி இணையமைச்சர் பதிலளித்துள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் எந்த மாநிலங்களில் எல்லாம் மெட்ரோ அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது... அதற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்த தகவல்களும் பகிர்ந்துள்ளார்.
மற்ற மெட்ரோ திட்டங்கள்: அதன்படி நாக்பூர் மெட்ரோ 2ம் கட்டம், புனே மெட்ரோ விரிவாக்கம், கான்பூர் மெட்ரோ, ஆக்ரா மெட்ரோ, கொச்சி மெட்ரோ முதல் மற்றும் 2ம் கட்டம், டெல்லி மெட்ரோ 4ம் கட்டம், குருகிராமில் அமையும் மெட்ரோ, அகமதாபாத் மெட்ரோ, சூராத் மெட்ரோ ஆகிய திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், கடந்த 2 நிதியாண்டுகளில் மத்திய அரசு இதில் அதிகபட்சமாக டெல்லி- காசியாபாத்- மீரட் மெட்ரோவுக்கு ரூ. 43,431 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும், பெங்களூர் மெட்ரோவுக்கு ரூ. 7658 கோடியும், மும்பை மெட்ரோவுக்கு 4,402 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது. இது தவிர கான் பூர் ரூ.2,629 கோடி, அகமதாபாத் ரூ. 2596 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கொச்சி மெட்ரோவுக்கு ரூ. 146 கோடியும், போபால் மெட்ரோவுக்கு ரூ. 830 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதுபோல பல்வேறு நகரங்களில் அமையும் மெட்ரோ திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மெட்ரோ திட்டம் இப்போது மாநில அரசுன் திட்டமாகவே செயல்படுத்தப்படுவதால் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறப்படுள்ளது.
சென்னை மெட்ரோ: சென்னையில் இப்போது விம்கோ நகர்- சென்னை ஏர்போர்ட், சென்னை சென்ட்ரல்- பரங்கிமலை என 2 ரூட்களில் இயங்கி வருகிறது. அடுத்தக் கட்டமாக 116 கிமீ தொலைவுக்கு மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில்களை இயக்க இப்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த ரூட்டில் 2026 முதல் படிப்படியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications