முதல்வராக முடியாமல் தவிக்கும் விஜய்? உளவுத் துறைக்கு போன முக்கிய ரிப்போர்ட்! என்ன நடக்கும்?
சென்னை: தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலால் மாநிலத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எதற்காக இந்த உஷார் நிலை என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முறை மக்கள் வெளிநாடுகளில் லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்து கொண்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்து வாக்களித்துவிட்டு சென்றனர்.

இதனால் இந்த முறை வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்தது. இது ஆட்சி மாற்றத்திற்கானது என மூத்த பத்திரிகையாளர்கள் கூறி வந்தனர். ஆனாலும் கருத்துக் கணிப்பு முடிவுகள் எல்லாம் திமுக கூட்டணியே அபார வெற்றி பெறும் என தெரிவித்தன.
இந்த நிலையில் கடந்த மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் விஜய் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முந்தியது. காலை 12 மணிக்கெல்லாம் தேர்தல் முடிவு நிலவரம் தெரியவந்துவிட்டது.
இதையடுத்து 234 தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் விஜய் கட்சி 108 இடங்களில் வென்றது. எனினும் 118 இடங்கள் பெரும்பான்மைக்கு தேவை! இதனால் விஜய், காங்கிரஸ் கட்சியின் உதவியை நாடினார்.
திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி உடனே விஜய்க்கு ஆதரவு அளிக்க சம்மதம் தெரிவித்துவிட்டது. 2 அமைச்சர் பதவியையும் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய் 112 பேரின் கையெழுத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகரை அணுகிய போது அவர் ஆட்சி அமைக்க 118 இடங்களுடன் வருமாறு கூறுவிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் விஜய், ஆளுநரை இரு முறை சந்தித்தும் வேலைக்கு ஆகவில்லை, இதனால் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் இணைந்து ஆட்சியை அமைக்கும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக இது நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்க அவர் மலை போல் நம்பியிருப்பது இரு கம்யூனிஸ்ட்கள், விசிக ஆகியோரைத்தான்.
இந்த நிலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை இந்த கட்சிகளை சேர்ந்த சண்முகம், வீரபாண்டியன், திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அது போல் நேற்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் சென்னையிலேயே இருக்க உத்தரவிட்டுள்ளார். தான் எந்த மாதிரியான முடிவுகளை எடுத்தாலும் அதற்கு கட்டுப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாராம்.
அது போல் எடப்பாடி பழனிசாமி நேற்று புதுவையில் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க வந்த போது நாளைய முதல்வர் எடப்பாடியார் என்ற கோஷம் எழுந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் 5 ஆண்டுகளில் இரண்டரை வருடம் அதிமுகவும், அடுத்த இரண்டரை வரும் திமுகவும் ஆட்சி அமைக்க போவதாக பேச்சுகள் நடந்து வருகின்றன. இது தவெகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமூகவலைதளங்களில் கொதித்து போயுள்ளனர்.
இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு போல் ஒரு போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடப்படுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் இருப்பதாக உளவுத் துறைக்கு எச்சரிக்கை கிடைத்துள்ளது. இதனால் தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications