மொத்தமாக மாறும் சென்டிரல் சதுக்கம்! சென்டிரல் ஸ்டேஷன் அருகே வரும் மெகா 27 மாடி கட்டிடம்! வாவ் பிளான்
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் மிக விரைவில் அட்டகாசமான மாற்றம் வர போகிறது. இது அப்பகுதியில் இருக்கும் முக்கிய பிரச்சினையை சரி செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ கட்டுமானத்திற்குப் பிறகு சென்னை வேற லெவலில் மாறி இருக்கிறது என்றே சொல்லலாம். அப்படிதான் சென்னை சென்டிரல் அருகே மெட்ரோ பணிகளுக்குப் பிறகு சென்டிரல் சதுக்கம் அமைக்கப்பட்டது.

இப்போது நகரின் அடையாளமாக இந்த சென்டிரல் சதுக்கம் மாறிவிட்டது. சென்டிரல் ரயில் நிலையம் வரும் மக்கள் ரிலாக்ஸ் செய்யத் தொடங்கி லட்சக் கணக்கான மக்கள் தினசரி இந்த சென்டிரல் சதுக்கத்திற்கு வந்து செல்கிறார்கள்.
சென்டிரல் சதுக்கம்: இதற்கிடையே இந்த சென்டிரல் சதுக்கத்தை மேலும் டெவலப் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக இங்கே மெகா கட்டிடம் ஒன்றைக் கட்ட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக இதில் 8 மாடிகளுக்கு பார்கிங் வசதி இருக்கும் எனச் சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இங்கே 1,900 வாகனங்கள் - அதாவது 1,500 டூ வீலர்கள் மற்றும் 400 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும்.
பல்வேறு தரப்பினரின் ஆலோசனைக்குப் பிறகு கட்டிடத்தின் டிசைன்களும் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கட்டிட டிசைன் பல முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இங்கே ஒரு 33-அடுக்கு கட்டிடத்தைக் கட்டவே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பின்னர் அது சில காரணங்களால் 31 மாடி கட்டிடமாக மாற்றப்பட்டது.
பல பிளான்கள்: அதன் பின்னர் ஒரே கட்டிடத்திற்குப் பதிலாக 2 கட்டிடங்களைக் கட்டலாம் என முடிவு செய்தனர். அதன்படி முதல் கட்டிடம் 17 தளங்களையும் மற்றொன்று ஏழு தளங்களையும் கொண்டதாகவும் இரண்டாவது கட்டிடம் 7 தளங்களைக் கொண்டதாக இருக்கும் என்றும் முடிவு செய்தனர்.
அதிலும் சில சிக்கல் இருக்கவே இறுதியில் 27 மாடிகளை கொண்ட ஒரே கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்தனர். சென்னை சென்டிரல் வரும் பயணிகள், அங்கு மெட்ரோ பயன்படுத்தும் பயணிகள் பார்கிங்கிற்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். வரும் காலத்தில் வாகன நெரிசலும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டு இந்த மெகா கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்துள்ளனர்.
அதிகாரிகள் சொல்வது என்ன: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இரண்டு கட்டிடங்கள் அமைக்கும் திட்டமே முதலில் இறுதி செய்யப்பட்டது. இருப்பினும், ஏற்கனவே இங்குப் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், இரண்டு கட்டிடம் என்பது அதை மேலும் மோசமாக்கும் என்பதால் மாற்றுத் திட்டங்களை யோசித்தோம். முதலில் இங்கே பல கடைகள் கொண்ட வணிக வளாகத்தை அமைக்க வேண்டும் என நினைத்தோம். இருப்பினும், இதனால் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்பதால் இதை அரசு அலுவலகங்களுக்குத் தர முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இப்போது இங்கே சென்டிரல் சதுக்கம் மட்டும் இருக்கிறது. இது மெட்ரோ ரயில், புறநகர் & நீண்ட தூர ரயில்கள் மற்றும் பேருந்துகள் இடையே மக்கள் எளிதாகச் சென்று வர வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த சதுக்கம் முதற்கட்ட மெட்ரோ பணிகளுக்குப் பிறகு மார்ச் 2022 இல் இது திறக்கப்பட்டது. இதற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இங்கே தான் இந்த அடுக்குமாடி கட்டிடத்தையும் கட்ட முடிவு செய்துள்ளனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications