156 மருந்துகளுக்கு தடை; இந்த முடிவு சரியா? உயிரைக் கொல்லும் மருந்தா இவை? இதையா சாப்பிட்டோம்?
சென்னை. மத்திய அரசு திடீரென்று 156 மருந்து பொருட்களை தடை செய்துள்ளது. சாதாரண காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் பாராசிட்மால் உள்ளிட்ட பல பொருட்கள் இதில் தடை செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கை சரியா? அதற்குள் ஒளிந்திருக்கும் உண்மை என்ன? என்பது பற்றி மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
வலி நிவாரணி மற்றும் வைட்டமின் மாத்திரைகள் உட்படக் கிட்டத்தட்ட 156 வகை காக்டெய்ல் மருந்து மாத்திரைகளுக்கு மத்திய தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சல் என்று மருந்துக் கடைகளில் வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் எந்தளவுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்பதை அறியாமல் மக்கள் இவற்றை உட்கொண்டு வருகின்றன.

ஒருநாள் காய்ச்சல் தானே என மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துக் கடைக்காரர் 20 ரூபாய்க்கு தரும் பல ரசாயன மருந்துகளின் கூட்டு கலவையால் எந்த மாதிரியான பக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும்? அதனால் வரும் தொல்லைகள் என்ன? என்பது பற்றி பல அதிர்ச்சி விளக்கங்களை அளித்துள்ளார் பொதுச் சுகாதார வல்லுநர் டாக்டர் அமலோற்பவநாதன். அவர் இந்த 156 மருந்துகளை மத்திய அரசு தடை செய்தது சரிதான் என்றும் ஒரு வாதத்தை முன்வைத்திருக்கிறார். இது பற்றி அமலோற்பவநாதன் பேசுகையில், "ஒருவருக்கு ஒரு வியாதி வருகிறது. அதற்கு எந்த ரசாயன மருந்தைக் கொடுத்தால் குணப்படுத்தலாம் என்பதை ஆராய்ந்துதான் மருந்தைத் தயாரிக்கிறோம். சில நேரங்களில் மருந்தின் திறனை அதிகப்படுத்துவதற்காக ஒரு வேதிப்பொருளுடன் மற்றொரு வேதிப்பொருளைக் கலந்து கொடுப்போம். அப்படித் தரும்போதுதான் அதன் வீரியம் நன்றாக உடலில் வேலை செய்யும்.
உதாரணமாகச் சொன்னால், ஆண்டிபயாடிக் மருந்துடன் வேலை திறனை அதிகப்படுத்த வேண்டி ஒரு கெமிக்கலை சேர்ந்து கொடுப்போம். அதேபோல ஆஸ்பிரின் மருந்துடன் ஒன்றைச் சேர்த்துக் கொடுப்போம். இதைப்போன்று உடனடி பலனைத் தரக்கூடிய சேர்மானம் கொண்டு கூட்டு மருந்து பொருட்கள் நிறைய உள்ளன.இதில் பிரச்சினை எங்கே வருகிறது என்றால்? சில நேரங்களில் சரியான முறையில் பொருந்திப் போகாத மருந்துகளை ஒன்று சேர்த்து நோயாளிக்குக் கொடுப்பார்கள்.
அதேபோலவே ஒருவருக்கு தோல் வியாதி வருகிறது என வைத்துக் கொள்வோம். ஒருவருக்கு ஒவ்வாமை மூலம் தோல் வியாதி வரலாம். அல்லது சோரியாஸ் போன்ற வியாதியினால் தோல்வியாதி வரலாம். பூச்சிக் கடியினால் கூட தோல் அலர்ஜி வரலாம். அதற்கு மருந்து தயாரிக்கும் போது தோல் வியாதிக்கு உள்ள அனைத்து வேதிப் பொருட்களையும் எடுத்து ஒன்றாகக் கலந்து ஒரு மருந்தை பொதுவாகத் தயாரித்து விடுவார்கள். இதை ஒருவர் பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும். இருந்தாலும் போகப் போகப் பல உபாதைகளைக் கொடுக்கும். பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
அதை மனதில் கொண்டுதான் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கூட்டுச் சேர்மான மாத்திரை மருந்துகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதற்கு முன்னால் 2016இல் இதே போல ஒரு முறை தடையை விதித்தார்கள். இப்போது 156 மருந்துகளைத் தடை செய்துள்ளார்கள். முன்பாக 344 மருந்துகளை தடை செய்தார்கள். அதன் பிறகு அதை மறு ஆய்வு செய்து 328 மருந்துகள் சட்ட விரோதமானவை என மாற்றி அறிவித்தார்கள். அதற்கு அடுத்து இப்போதுதான் தடை செய்துள்ளார்கள். இந்தத் தடை மிகமிக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாத மருந்து சேர்மானங்களை நாம் தடை செய்ய வேண்டியது அவசியம். எந்த வியாதிக்கு எந்த மருந்து சேர்மானம் சரியானது என்பதை உறுதி செய்து கொடுப்பது தவறு. நோயாளிக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என்பதால் ஆபத்தை விளைவிக்கக் கூடிய சேர்மானங்களைக் கலந்து மருந்தாகத் தருவது மிகமிக தவறானது. அதை மருத்துவர்களே செய்யக் கூடாது.

அஸ்க்ளோபினாக் அண்ட் பரசிட்டமால் மருந்தைப் பலர் காய்ச்சலுக்காக உடனடியாக உட்கொள்வார்கள். இதில் பரசிட்டமோல் உடல் காய்ச்சல் அளவை குறைக்கும். அஸ்க்ளோபினாக் காய்ச்சலைக் குறைப்பதோடு உடல் வலியையும் குறைக்கும். ஆகவே இதை அனைவருக்கும் கொடுக்கக் கூடாது. ஒருவர் காய்ச்சல் மட்டும் என்றால் அதற்காக மருந்தை மட்டுமே தரவேண்டும். கூடுதலாக ஒன்றைச் சேர்த்துத் தருவது மருத்துவரீதியாகத் தவறு. பரசிட்டமோல் போதும் என்றபோது கூடுதலாக அஸ்க்ளோபினாக் சேர்த்து உடலில் செலுத்துவதால் பக்கவிளைவுகள் வரலாம். அஸ்க்ளோபினாக் என்பது பாதுகாப்பான மருந்து இல்லை. உதாரணமாகச் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்தால் கிட்னி கெட்டுப் போகலாம். எனவேதான் இதைத் தவறு எனச் சொல்கிறோம்.
அசித்ரோமைசின் என்ற மாத்திரையும் adapalene என்ற மருந்தையும் சேர்த்து தோல் வியாதிக்கு ஒரு கிரீமாக தருவார்கள். இந்த adapalene என்பது முகப்பருக்காக பயன்படுத்துவது. அசித்ரோமைசின் என்பது இரு ஆன்டிபயாடிக். எல்லா முகப்பருவும் ஒவ்வாமையினால் வருவது அல்ல. அப்படி இருக்கும் போது தேவையே இல்லாமல் ஆன்டிபயாடிக்கை சேர்த்துக் கொடுப்பது பக்கவிளைவை உருவாக்கும். உடலில் ஆன்டிபயாடிக் அளவு தேவையில்லாமல் அதிகமாகும் போது அது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆன்டிபயாடிக் அளவை உடலுக்குள் பெருக்கும். அது அந்த நோயாளிக்கும் நல்லதல்ல. சமூகத்திற்கும் நல்லதல்ல. அதை உணர்ந்துதான் அரசு அதை தடைபடுத்தி இருக்கிறது. தேவையற்ற மருந்தை ஒரு நோய்க்குச் சேர்த்து வழங்குவதைத் தடுக்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க வேண்டிய தடை" என்கிறார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications