லம்ப்பாக ஓட்டுக்களை பிரிக்கும் சிறிய கட்சிகள்.. யாருக்கு பின்னடைவு?
சென்னை : அனல் தெறிக்கும் பிரசாரங்களுடன் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க, பிரசாரமும் தீவிரமடைந்து வருகிறது.
இந்த முறை 5 முதல்வர் வேட்பாளர்கள், ஏகப்பட்ட கட்சிகள், ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை நிரப்ப பல வகையிலும் போராடி, கட்சி தலைவர்கள் கூட்டணியை முடிவு செய்து களத்தில் இறங்கி உள்ளனர்.
ஆனால் அதிக கட்சிகள் போட்டியிடுவதால் பல கட்சிகளுக்கு ஏற்கனவே இருக்கும் ஓட்டு வங்கி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாத சீமான்
அதிமுக, திமுக தவிர்த்து டிடிவி தினகரன் தலைமையில் ஒரு கூட்டணியும், கமலஹாசன் தலைமையில் ஒரு கூட்டணியும் தேர்தலில் களமிறங்கி உள்ளன. இவர்கள் தவிர நாம் தமிழர் சீமானும் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறார். 2016 சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதிகளில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. இருந்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதே சமயம் 1.07 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை நாம் தமிழர் பிரித்துள்ளது.

யாருக்கு பின்னடைவை தரும்
கமலும், தினகரனும், அதிமுக-திமுக.,விற்கு மாற்று என கூறி களத்தில் இறங்கி இருந்தாலும் இவர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று தான் அனைத்து கருத்து கணிப்புக்களும் சொல்கின்றன. தினகரனின் அமமுக 1-5 இடங்களையும், கமலின் மக்கள் நீதி மய்யம் 2-6 இடங்களையும் பெறும் என கூறுகின்றன. இது உண்மையாகும் பட்சத்தில் கமலுக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும்.

ஓட்டுக்களை பிரித்த கட்சிகள்
கடந்த சட்டசபை தேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக - 40.88 சதவீதம் மற்றும் திமுக - 31.39 சதவீதம் ஓட்டுக்களை மட்டுமே பெற்றன. 72.27 சதவீதம் ஓட்டுக்கள் தவிர, மீதமுள்ள ஓட்டுக்களை முக்கிய 3 கட்சிகள் பிரித்துள்ளன. இரட்டை இலக்கத்தில் பெறாவிட்டாலும் காங்கிரஸ் 6.47 சதவீதம், பாமக 5.36 சதவீதம், பாஜக 2.86 சதவீதம் ஓட்டுக்களை பிரித்தன. இந்த முறையும் குறைந்தபட்சம் 11 கட்சிகளாவது நோட்டாவிற்கும் குறைவான ஓட்டுக்களை பிரிக்கும் என்றே கூறப்படுகிறது.

ஓட்டு வங்கியை பாதிக்கும் கூட்டணி
இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரசும், அதிமுக கூட்டணியில் பாஜக.,வும் உள்ளன. தேமுதிக, தினகரன் கூட்டணிக்கு சென்று விட்டது. அதிக கட்சிகள், சில பிரபலங்கள் சுயேட்சையாக போட்டியிடுவதால் ஓட்டுக்கள் அதிக அளவில் பிரிய வாய்ப்புள்ளது. அத்துடன் சில கட்சிகளின் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தியால் சில கட்சிகளின் ஓட்டு வங்கியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications