குட் நியூஸ்.. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 3 நாளைக்கு தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: 10-ந் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்... இதையடுத்து, தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது... கடந்த வாரம் முழுவதும் மழை பொழிவு இருந்த நிலையில், இந்த வாரமும் மழை பெய்து வருகிறது.
தற்போது தொடர்ந்து 3 நாளைக்கு மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வெப்ப சலனம்
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும், நாளையும் வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 10-ந் தேதி நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

கடலோர மாவட்டங்கள்
11-ந் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும்... வருகிற 12-ந் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது... நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video

மகிழ்ச்சி
கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 15 செ.மீ. பென்னாகரம் 8, சோளிங்கர் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.. கடல் பகுதிகளில் காற்று பலமாக வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்பதால் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications