தமிழக மக்களே ஹாப்பி நியூஸ்! இன்னும் 4 நாளுக்கு வெளுத்து வாங்கப் போகும் கனமழை! சென்னையில் எப்படி?
சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக, வரும் 21-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ரெட்ஹில்ஸ் பகுதியில் 4 செ.மீ. மழையும், புழல், பூண்டியில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

திருவள்ளூரில் கனமழை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், கே.ஜி. கண்டிகை, ஆற்காடு குப்பம், கனகம்மாசத்திரம், மாத்தூர், முருகம்பட்டு போன்ற பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் திருத்தணி நகராட்சியின் பல்வேறு சாலைகளில் மழை நீருடன் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், மாதவரம், மணலி, கொளத்தூர், புழல், செங்குன்றம், சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

வானிலை அறிவிப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக, இன்றும், நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

21-ம் தேதி மிதமான மழை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், வரும் 21-ம் தேதி வரை, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications