3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை - வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
Recommended Video

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், "காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசான மழை இன்று பெய்யக்கூடும்.

புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். நாளை முதல் 25-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியின் சிவலோகம், சித்தார்-2 பகுதியில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications