தமிழகத்தில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. அனல் காற்றும் குறையும் என தகவல்
Recommended Video
சென்னை: தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் முடிவுற்றாலும் வெப்பம் குறைந்தபாடில்லை. கூடவே சேர்ந்து அனல் காற்றும் வீசுவதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்லவே அஞ்சும் சூழல் தான் நிலவுகிறது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கோடை மழை பெய்து மக்களை அவப்போது நிம்மதியடைய செய்து வருகிறது.

ஜூன் 6-ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதலே குமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, முஞ்சிறை, புதுக்கடை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வானிலை மையம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறியுள்ள வானிலை மையம், தமிழ்நாட்டில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக கூறியுள்ளது.
வெப்பத்தின் தாக்கம் உள் மாவட்டங்களில் பகலில் அதிகமாக இருந்தாலும், மாலை வேளைகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மித மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரையில் 5 செ.மீ மழையும், திருப்பத்தூர், திருத்தணியில் தலா 3 செ. மீமழையும் பதிவாகியுள்ளது.
இதனிடையே அந்தமானில் பருவமழை துவங்கியுள்ளதை அடுத்து கடலோர பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 39 டிகிரி செல்சியசில் இருந்து, குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications