சூப்பர் மக்களே.. வெளுக்க போகுது மழை - கொளுத்த போகுது வெயில்.. தமிழகத்தில் மாறி மாறி வீசும் கிளைமேட்
சென்னை: ஒருபக்கம் மழை, இன்னொரு பக்கம் வெயில் என இருவித கிளைமேட்டும் தமிழகத்தில் நிலவுகிறது.. இதையடுத்து, எங்கெல்லாம் மழை பெய்யும், எங்கெல்லாம் வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், தமிழகத்தின் சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது.. அந்தவகையில், நாளை ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 19 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது..

அதேபோல, ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 21ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அலர்ட் தந்திருந்தது.. இந்நிலையில், வெயில் பற்றின தகவலையும் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது.
காரைக்கால்: அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக, ஒரு வார்த்துக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதன்படி, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று 17ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மிதமான மழை: நாளையும், நாளை மறுநாளும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்... அதேபோல, 20ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மற்றொருபக்கம் வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பையும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. அதில், அடுத்த 5 நாட்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி இன்று, 17ம் தேதி முதல் 20ம் தேதி என தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வெய்யில் அதிகமாக இருக்கும்..
சமவெளி இடங்கள்: அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° – 3° செல்சியஸ் உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°–40° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
நாளை 18ம் தேதி 20ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2° – 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°– 41° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்: 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications