எங்க ஆளுநர் தமிழிசை எப்படி?.. திமுக முகாமில் விசாரித்த ராவ் &கோ..!
சென்னை: தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை எப்படிப்பட்ட குணநலனுடையவர் என சந்திரசேகர் ராவ் தரப்பில் இருந்து திமுக முகாமில் விசாரிக்கப்பட்டதாம்.
தெலுங்கானா ஆளுநராக தமிழிசை விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் அவரை பற்றிய முழு விவரத்தை அலசி ஆராய்ந்து கையில் வைத்துள்ளாராம் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவரும், அம்மாநிலம் முதல்வருமான சந்திரசேகர் ராவ்.

நேற்றுவரை தெலுங்கானா ஆளுநராக இருந்த இ.எல்.நரசிம்மனால் இதுவரை எந்த நெருக்கடியும் ராவ் அரசுக்கு ஏற்பட்டதில்லை. அவருண்டு, ஆளுநர் மாளிகை உண்டு என தனது பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளார் நரசிம்மன்.
புதிதாக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை அரசுக்கு இடையூறு செய்யும் வகையில், ஆய்வு அது இது என சுற்றுப்பயணம் செய்தால் எப்படி எதிர்கொள்வது என நேற்றிலிருந்து ஐதராபாத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோரின் ஆய்வுப்பணிகளை ஆதரித்து பேட்டி அளித்தவர் தமிழிசை என்பதால், இவரும் அவர்களைப் போல் புறப்பட்டு விடுவாரோ என அஞ்சுகிறாராம் சந்திரசேகர ராவ்.
தமிழிசையை பற்றி திமுக சகாக்களிடம் ராவ் அண்ட் கோ விசாரித்ததற்கு, பாசிட்டிவான பதில் தரப்பட்டதாம். பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அச்சப்படத் தேவையில்லை என்றும், நல்ல மனம் கொண்டவர் எனவும் குட் சர்டிஃபிகேட் அளிக்கப்பட்டதாம். ஆனால் கட்சிக்காக அவ்வப்போது எதையாவது ஒன்றை பேசுவார் என்றும், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனவும் கூறப்பட்டதாம்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications