அமித் ஷாவிற்கு "எண்டு கார்டு".. எந்த பதவியும் கொடுக்க கூடாது! மோடிக்கு நாயுடு வைத்த பெரிய கண்டிசன்?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் அந்த கட்சிக்கு கடுமையான பல சிக்கல்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் நேற்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
சந்திரபாபு நாயுடு - நிதிஷ் கிங்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.
இன்று சந்திர பாபு நாயுடு டெல்லி செல்ல உள்ளார். என்டிஏ கூட்டணி தலைவர்களுடன் சந்திர பாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.
சந்திரபாபு நாயுடு கோரிக்கை: மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு ஆதரவு தர வேண்டும் என்றால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் முக்கியமான சில கோரிக்கைகளை பாஜகவிற்கு வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. அதன்படி ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு ஸ்டேட்டஸ் வேண்டும்.
2, ஆந்திராவில் புதிய தலைமையகம் அமைக்க சில லட்சம் கோடிகள் கேட்கப்படும்.
3. மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும்.
4, அமித் ஷா உடன் சந்திரபாபு நாயுடுவிற்கு இருக்கும் மோதலால் அமித் ஷா உள்துறை அமைச்சர் ஆக கூடாது என்று நாயுடு ஏற்கனவே பாஜகவிடம் பிரஷர் கொடுத்துள்ளாராம்.
5. மத்திய அமைச்சரவையில் நிதி துறை, உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை நாயுடு பாஜகவிடம் கேட்க உள்ளார்.
6. நாயுடுவிற்கு ஆந்திராவில் ஆட்சி அமைக்க பாஜக ஆதரவே தேவை இல்லை. அங்கே 175 இடங்களில் 135 இடங்களில் நாயுடுவின் தெலுங்கு தேசம் வென்றுள்ளதால், பாஜக அங்கே அவர்களை மிரட்ட முடியாது.
இந்த கோரிக்கைகள் போக இன்னும் சில கோரிக்கைகளை நாயுடு வைக்க உள்ளாராம்., இதில் எல்லா கோரிக்கைகளையும் ஏற்க காங்கிரஸ் தயாராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications