Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படி போடு.. மிட் நைட்டில் ஸ்டாலினுக்கு மெசேஜை போட்ட சந்திரபாபு நாயுடு.. திக்கி திணறிய பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் சந்திரபாபு நாயடு கேம் சேஞ்சராக, கிங் மேக்கர்களில் ஒருவராக மாறி உள்ளார். இவர் மற்றும் நிதிஷ் குமார் இருவரும் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர்.

இந்தியாவில் 2014க்கு முன்பு வரை பெரும்பாலும் கூட்டணி கட்சி ஆட்சிகள்தான் இருந்தது. அது மாநில கட்சிகளின் பொற்காலம். மாநில கட்சிகள் கைகாட்டும் தலைவர்கள்தான் பிரதமர்கள். அப்படித்தான் மன்மோகன் சிங் 10 வருடம் தனி மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி செய்தார்.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

அதற்கு முன் வாஜ்பாய் ஆட்சி, நரசிம்ம ராவ் தொடங்கி பலரின் ஆட்சி அப்படித்தான் இருந்தது. இதனால் பல முறை ஆட்சிகள் கவிழ்ந்து இருக்கின்றன. ஜெயலலிதா வாஜ்பாய் ஆட்சியை 13 நாட்களில் கவிழ்த்த கதை கூட அரங்கேறி இருக்கின்றது.

மாநில கட்சிகளின் கண்ட்ரோலில் மத்திய அரசு இருக்கும் போது மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது. அதிபர் ஆட்சி போல நடந்து கொள்ள முடியாது. மாநில அரசுகளை நசுக்க முடியாது. மாநில கட்சிகளை அழிக்க முயற்சிக்க முடியாது.

10 வருடம் இல்லை: கடந்த 10 வருடமாக அந்த மாநில அரசியல் மிஸ் ஆனது. மாநில கட்சிகளின் அந்த ஆதிக்கம் 10 வருடமாக இந்தியாவில் இல்லை. இப்போது அந்த வசந்தம்தான் மீண்டும் வந்துள்ளது. இனி சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் சொல்வதை கேட்டு மோடி நடக்க வேண்டும். அவர்கள் வைக்கும் சட்டத்திற்கு ஆட வேண்டும்.

கூட்டணியை உடைப்போம் என்று சொல்லி சொல்லியே பாஜகவை தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் இனி ஆட்டி வைக்கும்.

தேர்தல் ரிசல்ட்: 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.

பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.

ஸ்டாலினுடன் பேச்சு: அதிலும் சந்திரபாபு நாயுடு ஸ்டாலினுக்கு மிக நெருக்கம். சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் இருவரும் நெருக்கமான மாநில உறவு கொண்ட நண்பர்கள். நாயுடு முதலில் மோடிக்கு தனிப்பட்ட ஆதரவு கொடுப்பாரா என்பதே கேள்வியாக உள்ளது.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

பாஜக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும் மோடி பிரதமர் ஆக ஆதரவு அளிப்பாரா என்ற கேள்வி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஸ்டாலினிடம் ட்விட்டரில் நாயுடு பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது.

நேற்று முதல்வர் ஸ்டாலின் செய்த போஸ்டில், வாழ்த்துகள் சந்திரபாபு நாயுடு. நீங்கள் ஆந்திர சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளீர்கள். உங்கள் தலைமை ஆந்திர பிரதேசத்திற்கு செழிப்பையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும், அதன் மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றட்டும், என்றுள்ளார்.

இதற்கு மிக்க நன்றி என்று சந்திரபாபு நாயுடு பதில் அளித்துள்ளார். இது சாதாரண நன்றி என்றாலும் பாஜகவின் எதிரி திமுக உடன் நாயுடு நெருக்கமான நட்புடன் இருப்பது கண்டிப்பாக பாஜகவிற்கு இன்று இல்லை என்றாலும் வரும் நாட்களில் பெரிய அழுத்தத்தை கொடுக்க போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+