நயன்தாரா ஆவண படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படக் காட்சி! சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்த நிறுவனம்
சென்னை: நடிகை நயன்தாரா குறித்த ஆவணப்படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. நயன்தாராவின் ஆவணப் படத்தில் அனுமதி பெறாமல் சந்திரமுகி படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில், நயன்தாராவின் ஆவணப் படத்தில் சந்திரமுகி படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனவும், இதனை நீக்க வேண்டும் என்றும், ரூ. 5 கோடி கேட்டும் நோட்டீஸ் அனுப்பிய போதும் இன்னும் அந்த காட்சிகள் நீக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு வாரங்களுக்கு பதில் அளிக்க ஜான் ஸ்டூடியோ நிறுவனம், நெட்பிளிக்ஸ்க்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2024 அம் ஆண்டு நடிகை நயன்தாராவின் ஆவணப் படம் வெளியானது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த ஆவணப்படத்தில் தன்னுடைய அனுமதி பெறாமல் நானும் ரவுடிதான் பட காட்சிகளை படமாக்கியதாக கூறி ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நடிகை நயன்தாராவுக்கு மேலுநடிகை நயன்தாராவின் ஆவணப் படத்தில் எங்களது அனுமதி பெறாமல், சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்த படத்தின் பதிப்பு உரிமை பெற்ற ஏபி இண்டர்நேஷனல் என்று நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், நடிகை நயன்தாரா நடித்துள்ள ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சியினை நீக்க வேண்டும் என்றும், ரூ 5 கோடி இழப்பீடு கேட்டும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் கூட, தற்போதும் அந்த காட்சிகள் நீக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அந்த பட காட்சிகளை நீக்க வேண்டும். ஆவணப்படத்தின் மூலம் ஈட்டிய லாப கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி இன்று விசாரித்தார்.

அப்போது இந்த மனு மீது இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, நயன்தாரா ஆவணப்படத்தை தயாரித்த ஜான் ஸ்டூடியோ நிறுவனத்திற்கும் நெட்பிளிக்ஸ்க்கும் உத்தரவிட்டார். விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications