புட்டு புட்டு வைத்த சந்திரசேகர்.. பிசினஸ் நடக்குதா? காங்கிரஸில் அதிர்ச்சி! வாயடைத்து போன ஜோதிமணி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் வேட்பாளர் தேர்வு முறைகேடுகள் குறித்த எம்.பி. ஜோதிமணியின் அதிரடி குற்றச்சாட்டும், அதற்குப் பதிலடியாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் கே.சந்திரசேகரன் எழுப்பியுள்ள அடுக்கடுக்கான கேள்விகளும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உட்கட்சி பூசல் பொதுவெளிக்கு வந்திருக்கும் இந்தச் சூழல், கூட்டணி கட்சிகள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் 28 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 28 தொகுதிகளை அடையாளம் கண்டு தனது விருப்பப்பட்டியலை திமுக தலைமையிடம் ஏற்கனவே கொடுத்திருக்கிறது.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி
ஆனால், சில பல தொகுதிகளை அடையாளம் காண்பதில் திமுக மற்றும் காங்கிரசுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததால், தொகுதிகளை முடிவு செய்வதில் இழுபறி நீடித்தது. இதற்கிடையே, கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை கடந்த 2 நாட்களாக ஒதுக்கி வந்துள்ள திமுக, இன்று 28-ந்தேதிக்குள் அனைத்து தொகுதிகளுமான படடியலை ரிலீஸ் செய்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில்தான், ’’காங்கிரஸ் கட்சியில் தொகுதிகள் தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. மிக ரகசியமாக நடக்கிறது. விற்பனை அணுகு முறையோடுதான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது’’ என்று நேற்று அதாவது 27-ந்தேதி ஒரு அதிரடி குண்டை வீசினார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.
சந்திரசேகரன் பதிலடி
இந்த குண்டு காங்கிரசில் மட்டுமல்ல, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றனர் என்பது தான் ஜோதிமணியின் குற்றச்சாட்டு.
இந்த சூழலில், ஜோதிமணியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி தரும் வகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தி தொடர்பாளர் கே.சந்திரசேகரன், பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
அதில், '’ காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறை குறித்து கடுமையான கேள்விகளை பொதுவெளியில் எழுப்பி உள்ளீர்கள். தாங்கள் திரு.ராகுல்காந்தி, திரு. மல்லிகார்ஜுன கார்கே உட்பட அனைத்து மேலிட தலைவர்களுடனும் நேரடியாக பேசிட, தகவல்களை தெரிவித்திட வாய்ப்பு உள்ளவர்.
காங்கிரஸ் கட்சி - கரூர்
அப்படியிருக்கையில் உட்கட்சிப் பிரச்சனைகளை பொதுவெளியில் பதிவிடுவது ஏன்? இதனால் நமது கட்சிக்குத்தான் பலவீனம் என்பதை உணராதது ஏன்?
* இந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறும் நீங்கள், பாராளுமன்ற வேட்பாளராக உங்களை அறிவித்தபோது என்ன வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்கத் தயாரா?
• தாங்கள் கட்சியில் சாதாரண நிலையில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினராக உயர்வுபெற்றபோது மகிழ்ச்சி அடைந்தவர்கள் நான் உட்பட பலர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினரான பிறகு, உங்கள் தொகுதியில் கட்சியை வளர்க்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? கட்சித் தொண்டர்களுக்காக நீங்கள் செய்த பணி என்ன? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு தாங்கள் எத்தனை முறை வருகை தந்து இயக்கத் தோழர்களை சந்தித்திருக்கிறீர்கள்?
• கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன், கூட்டணிக் கட்சியுடன் முரண்பட்டு, கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நீங்கள், பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அமைதியாக இருந்து, அதே கட்சியின் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வானீர்கள். ஆனால், இப்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் இது மாதிரி முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவிப்பதன் உள்நோக்கம் என்ன?
• பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களின்போது ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து, தங்களுக்கான பதவிகளைப் பெறும் உங்களைப் போன்றவர்கள், எந்தப் பலனையும் அடையாமல், கட்சியில் அடுத்த நிலையில் இருக்கும் தோழர்கள் போட்டியிட கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும், இயக்கத்தை கீழ் நிலையில் வளர்ப்பதற்கான வாய்ப்பாக இருக்கும், உள்ளாட்சித் தேர்தல்களின் போது, அவர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு எந்தக் குரலையும் எழுப்பாமல் அமைதியாகி விடுவது ஏன்?
• உங்களைப் போன்ற தலைநகர அரசியல் செய்யும் மூத்த தலைவர்களே இப்படி பொதுவெளியில் நம் கட்சியைப் பற்றி (அது தவறோ, சரியோ) எதிர்மறைக் கருத்துக்களைப் பதிவிடும்போது, டெல்லிக்குச் சென்று வருவதற்கான வாய்ப்புகள் கூட இல்லாத கீழ்நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் மனதில் சோர்வு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா?
• என்னைப் போன்று, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களிடம், மற்ற கட்சியினரும், நெறியாளரும் உங்களைப் போன்றவர்களுடைய கருத்துக்களை முன்வைத்து கேள்விகளை எழுப்பும்போது, எப்படிப்பட்ட சங்கடங்களை எதிர்கொள்கிறோம் என்பது, செய்தித் தொடர்பாளராக இருக்கும் உங்களுக்குத் தெரியாதா?
• இறுதியாக ஒரு கேள்வி… இரண்டாவது முறையாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாங்கள், அடுத்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன், வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள் என்று இப்போதே அறிவிக்கத் தயாரா? ’’ என்று அதிரடியாக எழுப்பியுள்ள சந்திரசேகரனின் கேள்விகள், காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறதாம்..!!
- எழில்
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications