சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனித தவறா? சந்திரயான் 2ல் கடைசி நொடியில் நடந்தது என்ன? விக்ரம் லேண்டர் சொதப்பியது எங்கே?

சந்திரயான் 2 நிலவில் இறங்காமல் போனதற்கு பின் மனித தவறும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிப்பு

    சென்னை: சந்திரயான் 2 நிலவில் இறங்காமல் போனதற்கு பின் மனித தவறும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

    உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த சந்திரயான் 2 நிலவில் இறங்கவில்லை. சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்துள்ளது.

    நேற்று இரவு 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. இப்போது வரை அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதை தொடர்பு கொள்ள இஸ்ரோ அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

    சாதாரண விவசாயி மகன் இன்று இஸ்ரோவின் ராக்கெட் மனிதன்.. நம்ப முடியாத அதிசயம் 'சிவனின்' பயணம்சாதாரண விவசாயி மகன் இன்று இஸ்ரோவின் ராக்கெட் மனிதன்.. நம்ப முடியாத அதிசயம் 'சிவனின்' பயணம்

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இந்த தவறு எப்படி ஏற்பட்டது என்று யாருக்கும் தெரியவில்லை. எப்படி தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இணைப்பில் எங்கு பிரச்சனை ஏற்பட்டது. எதனால் விக்ரம் லேண்டர் தரையிறங்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எப்படி இருக்கிறது

    எப்படி இருக்கிறது

    இந்த நிலையில் சந்திரயான் 2 ஏன் நிலவில் இறங்கவில்லை என்று இஸ்ரோ முன்னாள் பணியாளரும், மூத்த விஞ்ஞானியுமான நம்பி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த பிரச்சனைக்கு பின் சிறிய மனித தவறும் கூட காரணமாக இருக்கலாம். மனித தவறால் இந்த நிகழ்வு நடந்திருக்கலாம்.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    சந்திரயான் 2 தோல்வி என்று கூற முடியாது. நாம் 95 சதவிகிதம் வென்றுவிட்டோம். கடைசி புள்ளியில்தான் தோல்வி அடைந்துவிட்டோம். ஆனால் அதையும் கூட தோல்வி என்று புறந்தள்ளி விட முடியாது. மிக நெருக்கமாக சென்றுவிட்டோம்.

    நடக்கும்

    நடக்கும்

    இந்த திட்டம் பெரிய அளவில் வெற்றிபெற்றுவிட்டது. இதில் எங்கே பிரச்சனை ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியும். இது மனித தவறுதான். தொழில்நுட்ப உதவியுடன் இதில் எங்கே தவறு ஏற்பட்டது என்று எளிதில் நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Chandrayaan 2: Mistake in Vikram Lander may be human error says Nambi Narayanan in a speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X