இப்படி ஒரு விஷயமா? எதிர்பார்க்கவே இல்லை.. நிலவை தோண்டிய சந்திரயானுக்கு ஆச்சர்யம்.. பெரிய ட்விஸ்ட்
சென்னை: நிலவில் ஏற்பட்டு இருக்கும் வெப்பநிலை மாறுபாடு மிகவும் வியப்பு அளிப்பதாகவும், அது தொடர்பான சந்திரயான் 3ன் கண்டுபிடிப்பு ஆச்சர்யம் அளிப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திராயனின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவில் ஆய்வு செய்து வருகிறது. இதில் பிரக்யான் ரோவர் உதவியுடன் சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை இறக்கப்பட்டது. இதன் ரீடிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி நிலவில் இருக்கும் மணல் பரப்பு, உட்பரப்பில் செய்யப்பட்ட சோதனையில் அவை பெரிதாக வெப்பத்தை கடத்தவில்லை. அதேபோல் இங்கே வெப்பம் வேறு வேறாக இருக்கிறது. அதாவது ஒரே வெப்பம் இல்லை. வெப்பத்தில் பெரிய மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பகிர்ந்துள்ள ஒரு வரைபடம், நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடுகளை 0 முதல் 70 டிகிரி செல்சியஸ் வரை விளக்கியுள்ளது, இது பல்வேறு ஆழங்களில் லேண்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆழம் மாற மாற வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறி உள்ளது. நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.
நிலவின் மேல் பகுதியில் சில இடங்களில் 70 டிகிரி செல்ஸியஸ் கூட நெருங்கி உள்ளது. அதாவது நிலவின் தரைப்பகுதியில் தென் மண்டலத்தில் கூட வெப்பம் அதிகமாக உள்ளது.
ஆச்சர்யம்: இதுதான் தற்போது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி நிலவின் மேற்பரப்புக்கு அருகில் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எதிர்பார்க்கப்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். "மேற்பரப்பில் வெப்பநிலை 20 டிகிரி சென்டிகிரேட் முதல் 30 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கும் என்று நாங்கள் அனைவரும் நம்பினோம், ஆனால் அது 70 டிகிரி சென்டிகிரேட் ஆகும். இது நாங்கள் எதிர்பார்த்ததை விட வியக்கத்தக்க வகையில் அதிகமாக உள்ளது" என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியிலும் வெப்பநிலை தோண்ட தோண்ட மாறும். ஆனால் இந்த அளவிற்கு பெரிய மாற்றம் இருக்காது. இதுதான் நிலவிற்கு பூமிக்கும் உள்ள பெரிய வேறுபாடு. நாம் பூமியின் உள்ளே இரண்டு முதல் மூன்று சென்டிமீட்டர்கள் தோண்டி செல்லும்போது, இரண்டு முதல் மூன்று டிகிரி சென்டிகிரேட் மாறுபாட்டைக் காண்பது அரிதாகவே உள்ளது, அதேசமயம் சந்திரனில் சுமார் 50 டிகிரி சென்டிகிரேட் மாறுபாடு உள்ளது. இது சுவாரஸ்யமான ஒன்று, என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திர மேற்பரப்பில் -- தென் துருவத்தைச் சுற்றி -- 70 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை மாறுபாடு உள்ளது. அதன்படி ஆழம் மாற மாற வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறி உள்ளது. நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை.
சந்திரயான்-3 இன் லேண்டர், ஒவ்வொரு ஆழத்திலும் வெப்பநிலை மாறுபாட்டை அளவிட, நிலவின் மண்ணில் 10 செ.மீ நீளமுள்ள ஒரு ஆய்வு கருவியை செருகுவதன் மூலம் இந்தத் தரவைச் சேகரிக்கிறது. இதில் 10 வெப்பநிலை மானிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமே இந்த முடிவு வெளியாகி உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications