பெரிய சக்ஸஸ்! நிலவில் இருந்த மிகப்பெரிய குழி! சட்டென சுதாரித்த பிரக்யான் ரோவர்.. "திக் திக்" சம்பவம்
சென்னை: நிலவில் இருந்த மிகப்பெரிய குழி ஒன்றை பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக கடந்து உள்ளது. இதன் மூலம் பிரக்யான் ரோவர் முக்கியமான சோதனை ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ளது.
சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பிரக்யான் ரோவர் நிலவில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் : நிலவில் இருந்த மிகப்பெரிய குழி ஒன்றை பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக கடந்து உள்ளது. இதன் மூலம் பிரக்யான், சந்திரயான் -3 ரோவர், நிலவில் அதன் முதல் மிகப்பெரிய தடங்களைகடந்துள்ளது - சுமார் 100 மிமீ ஆழம் கொண்ட சந்திர பள்ளம் என்று அழைக்கப்படும் நிலவின் குழியில் விழாமல் அது வெற்றிகரமாக கடந்து உள்ளது.
இதன் மூலம் வரும் நாட்களில் பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக இதேபோல் நிலவின் குழிகளை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நிலவில் பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் விழாமல் பிரக்யான் ரோவர் செல்ல வேண்டும். இது மிக முக்கியமான விஷயம் ஆகும். அந்த வகையில் பள்ளங்களில் விழாமல் பிரக்யான் ரோவர் முதல் கட்டமாக நகர்ந்து சாதனை படைத்துள்ளது.
தன்னிச்சை கிடையாது: இந்த ரோவர் முழுக்க முழுக்க தன்னிச்சையாக இயங்கவில்லை. இதற்கு சில ஆர்டர்கள் பூமியில் இருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை மூலம் கொடுக்கப்படுகிறது. நாங்கள் இதற்காக பூமியில் இருந்து நிலவில் பிரக்யான் செல்ல வேண்டிய பாதையை திட்டமிடுவோம். ஒவ்வொரு 5 மணி நேரமும் இது கடக்க வேண்டிய பாதையை நாங்கள் கணக்கிடுவோம்.
குழிகள் குறைவாக உள்ள பகுதிகள், எளிதாக செல்ல வேண்டிய பகுதிகளை கணக்கிடுவோம்., அதில் இருக்கும் கேமராக்கள் உதவியுடன் ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கான பாதையை கணக்கிட்டு மேப் ஒன்றை உருவாக்குவோம். அதை பின்னர் பிரக்யான் ரோவரிடம் அனுப்புவோம். பின்னர் அந்த பாதையில் பிரக்யான் ரோவர் இயங்கும். இதற்காக 24 மணி நேரமும் ஆட்கள் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உள்ளனர்.

பிரக்யான் ரோவர்: பிரக்யான் ரோவர் நிலவில் இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலொஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இதில் மொத்தம் 6 சக்கரங்கள் இருக்கும். லேண்டர் தொகுதி: 26 கிலோ ரோவர் உட்பட 1752 கிலோ எடை கொண்டது.
குறிக்கோள் என்ன?: சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது.
லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல். இது வெற்றிகரமாக முடிந்துவிட்டது.
நிலவின் வெப்பம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்வது. இந்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தல்.
நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.












Click it and Unblock the Notifications