நிலவின் தென் துருவத்தில் வெடித்து சிதற போகும் சந்திரயான் 3 லேண்டர், ரோவர்? விஞ்ஞானிகள் அச்சம்
சென்னை: நிலவின் தென் துருவத்தில் இறங்கி இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த விண்கலம் வெடித்து சிதற வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திட்டமிட்டபடி தனது வேலையை முடித்துக்கொண்ட பிரக்யான் ரோவர், தற்போது உறக்க நிலையில் இருக்கிறது. சந்திரயான் 3 தரையிறங்கிய பின்னர் இரண்டாம் பகல் பொழுதில் அதைனை மீண்டும் உயிர்ப்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதை எழுப்ப முடியவில்லை. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "சந்திரயான் 3 திட்டத்தின் நோக்கம் என்பது சரியான இடத்தில் தரையிறங்குவதுதான். நமக்கு முன்னர் விண்கலனை ஏவிய ரஷ்யாவும், பின்னர் விண்கலனை அனுப்பிய ஜப்பானுக்கும் இதுதான் நோக்கம்.
இதற்கு முன்னரும் பல நாடுகள் நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளன. ஆனால், அப்போது பின்பற்றப்பட்ட தொழில்நுட்பம் வேறு. இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் வேறு. பிற்காலங்களில் நிலவில் குடியிருப்புகள் உருவானால் அங்கு பொருட்களை கொண்டு செல்ல சரியான தொழில்நுட்பம் அவசியம். அதைதான் இஸ்ரோ முயன்று பார்த்திருக்கிறது. இந்த முயற்சி 100 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. அதற்கு நாம் நடத்திய ஆய்வுகள், அதில் கிடைத்த தகவல்கள் எல்லாம் போனஸ்தான். அந்த வகையில் லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியாவிட்டால் கூட சந்திரயான் 3 திட்டம் வெற்றிதான்.
நிலவில் பகல் பொழுதுக்கும் இரவு பொழுதுக்கும் இடையே இருக்கும் வெப்ப வேறுபாடு ஏறத்தாழ 200 டிகிரி செல்சியஸ். சீனா போன்ற நாடுகள் அனுப்பிய விண்கலத்தில் இயற்கை கதிரியக்க மின்கலம் (பேட்டரி) பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் அது ஓராண்டு வரை செயல்படுகிறது. ஆனால் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் இதை நாம் பொருத்தி அனுப்பவில்லை. எனவே இவை இரண்டையும் மீண்டும் உயிர்ப்பிப்பது சவாலான பணி" என்று கூறினர். இவர்கள் கூறியதை போலவே தற்போதுவரை சந்திரயான் 3 லேண்டரையும், ரோவரையும் நாம்மால் மீண்டும் எழுப்ப முடியவில்லை.
அதேபோல, தற்போது மற்றொரு அச்சத்தையும் விஞ்ஞானிகள் எழுப்பியுள்ளனர். அதாவது, சந்திரயான் 3 லேண்டரும், ரோவரும் விரைவில் வெடித்து சிதற வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். நிலவுக்கு வளிமண்டலம் கிடையாது. இதனால் அதன் மேற்பரப்பில் ஏராளமான எரிகற்கள் வந்து விழும். பூமியிலும் இதுபோன்று நடப்பதுண்டு. ஆனால் நமக்கு வளிமண்டலம் இருப்பதால் இந்த விண்கற்கள் எரிந்து சாம்பலாக மாறிவிடுகிறது. நிலவில் இதற்கு வாய்ப்பு கிடையாது. எனவே ஏதாவது ஒரு எரிக்கல் இந்த ரோவர் மற்றும் லேண்டர் மீது விழுந்தால் அது வெடித்து சிதறும். இதுபோன்ற சம்பவம் ஏற்கெனவே நடந்திருக்கிறது. அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இந்த தாக்குதலை எதிர்கொண்டது எ்னபதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications