Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திரயான் 3.. தொட்டு விடும் தூரத்தில் சந்திரன்.. வெற்றிக்காக நாடு முழுவதும் சர்வ மத பிரார்த்தனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரயான் - 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டி நாடு முழுவதும் சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. குக்கே சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகாபூஜைகள் செய்யப்பட்டன. மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் செய்யப்பட்டன.

உலகத்தில் உள்ள அனைவரின் கண்களும் நிலவை நோக்கி உள்ளது காரணம் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் இன்று புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Chandrayaan-3 landing today All religious prayers across the country

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 40 நாள் பயணத்துக்கு பிறகு, விண்கலம் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது. சந்திரயான் 3ன் பயணம் வெற்றியடைய வேண்டி ஜூலை மாதம் திருமலை திருப்பதிக்கு விஞ்ஞானிகள் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

சந்திரயான் 3 தனது பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. திட்டமிட்டபடி லேண்டர் கலன் இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலவில் தரையிறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அதனடிப்படையில் சாதமான சூழல் இல்லாவிட்டால் வரும் 27ஆம் தேதி தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரோவின் அகமதாபாத் மைய இயக்குநர் தேசாய் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விக்ரம் லேண்டர் தொகுப்புகள் வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியாக சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த இடத்தில் தரையிறங்குவது என்பதை கண்டறிய உதவும் லேண்டர் பொசிஷன் டிடெக்சன் கேமரா மூலம் நிலவுக்கு 70 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து கடந்த 19 ஆம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இஸ்ரோ, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலவின் வரைபடத்துடன் இந்த புதிய புகைப்படத்தை லேண்டர் ஒப்பிட்டு பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவடைய தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பிரசித்து பெற்ற குக்கே சுப்பிரமணியா கோயிலில் இஸ்ரோ சார்பில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. முருகன் சிலைக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும், பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரா கோவிலில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று இதுபோன்று பல்வேறு கல்லுாரிகளிலும், நாளை மாணவர்களுக்கு நேரலையில் திரையிட்டு காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 நிலவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்கம் செய்யப்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் அனைத்து மதங்களைப் பின்பற்றும் மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அர்ச்சகர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த பூசாரிகள் அக்னி தீர்த்தம் கடற்கரையில் யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர்.

சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக ஹரித்வாரில் மாதா வைஷ்ணோ தேவி குகை யோகா கோயில் தப்கேஷ்வர் மகாதேவ் டேராடூனில் இன்று சிறப்பு கங்கா பூஜை செய்யப்பட்டது.

விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்குவதற்காக ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மோன்ரோயில் உள்ள ஓம் ஸ்ரீ சாய் பாலாஜி கோவில் மற்றும் கலாச்சார மையத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+