வாவ்.. நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் 3D போட்டோ வெளியீடு.. ரோவர் செய்த தரமான சம்பவம்! செம
சென்னை: நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்த விக்ரம் லேண்டரின் 3டி போட்டோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டரை நிலவில் இருக்கும் பிரக்யான் ரோவர் போட்டோ எடுத்த நிலையில் தற்போது அதனை பொதுமக்களின் பார்வைக்காக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஜூலை 14ம் தேதி சந்திரயான் -3 திட்டம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.

இதையடுத்து லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவரும் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வை தொடங்கியது. நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாற்றம் மற்றும் அதிர்வுகள் பற்றி ஆய்வு செய்து முக்கிய தகவல்கள் அனுப்பியது.
அதேபோல் பிரக்யான் ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி நிலவின் தென்துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்தது.
மேலும்அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டானியம், மெக்னீசியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம் சந்திரயான் -3 திட்டம் என்பது வெற்றி பெற்றுள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை சூரிய பேனல்கள் மூலம் செயல்படுகின்றன. இத்தகைய சூழலில் தான் தற்போது நில
இதனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் செயல்பட முடியாது. இதனால் தற்போது விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவற்றில் இருந்த டேட்டோக்கள் மொத்தமாக பெறப்பட்டு தூங்கும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீண்டும் நிலவில் பகல் ஆரம்பிக்கும்போது அதாவது செப்டம்பர் 22ம் தேதி விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை மீண்டும் நிலவில் செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் 3டி போட்டோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டரின் இந்த போட்டோவை கடந்த மாதம் 30ம் தேதி பிரக்யான் ரோவர் எடுத்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
‛‛அனாக்லிஃப் என்பது ஸ்டீரியோ அல்லது மல்டி-வியூ எனும் வகையில் முப்பரிமாண படங்கள் வழியாக குறிப்பிட்ட பொருளை பார்ப்பதாகும். அந்த வகையில் பிரக்யான் ரோவர் தனது NavCam மூலம் விக்ரம் லேண்டரை போட்டோ எடுத்துள்ளது. இதனை ஸ்டீரியோ இமேஜாக மாற்றி 3டி போட்டோவாக வழங்கி இருக்கிறோம். இதில் இடதுபக்கத்தில் உள்ள போட்டோ சிவப்பாகவும், வலதுபக்க போட்டோக்கள் நீலம், பச்சை நிறத்திலும் தெரியும். இதனை 3டி-யில் பார்க்க சிவப்பு மற்றும் சியான் கண்ணாடிகள் பரிந்துரை செய்யப்பட உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications