அடுத்த அப்டேட்! நிலவில் பிளாஸ்மா அளவீடு செய்த விக்ரம் லேண்டர்! கவனிக்கும் வெளிநாடுகள்! ஏன் முக்கியம்
சென்னை: நிலவின் தென்துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் முன்பு கணிக்கப்பட்ட அளவை விட குறைவான அளவில் இருப்பது துவக்க ஆய்வில் தெரியவந்துள்ளதாக மாஸான குட்நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளது. இந்த பிளாஸ்மா என்றால் என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
நிலவின் தென்துருவத்தை சந்திரயான் -3 விண்கலம் ஆய்வு செய்து வருகிறது. நிலவின் தென்துருவத்தில் கடந்த 23ம் தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பிறகு அடுத்த 4 மணிநேரத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் கால்பதித்தது.

தற்போது விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பிரக்யான் ரோவர் நிலவில் ஆக்சிஜன், சல்பர், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ் உள்பட பல தனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
மேலும் ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை பிரக்யான் ரோவர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் விக்ரம் லேண்டர் ஆய்வில் புதிய தகவல் என்பது வெளிவந்துள்ளது. அதாவது நிலவில் மேற்பரப்பில் பிளாஸ்மாவின் இருப்பதாகவும், அதன் அளவு மிகவும் குறைந்த அளவில் இருப்பதாகவும் சூப்பரான தகவலை கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், ‛‛ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பவுண்ட் ஹைபர்சென்சிட்டிவ் அயனோஸ்பியர் மற்றும் அட்மாஸ்பியர் - லாங்முயர் ப்ரோப் (RAMBHA-LP) எனும் கருவி சந்திரயான் 3 லேண்டரில் உள்ளது. இந்த கருவி நிலவின் தென்துருவத்தில் பிளாஸ்மா அளவை முதல் முதலாக அளவீடு செய்துள்ளது. இந்த அளவீடு என்பது நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா என்பது முன்பு கூறியதை விட குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் விக்ரம் லேண்டர் கண்டுபிடித்துள்ள இந்த தகவல் என்பது விண்வெளி ஆய்வுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது பிளாஸ்மா என்பது நிலவின் மேற்பரப்பில் மின்காந்த அலைகளை உருவாக்கும் எலக்ட்ரான், புரோட்டான்கள் உள்ளிட்டவற்றின் அளவை குறிக்கும். அங்கு சூரிய வெப்ப காற்றின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா உருவாகிறது. பிளாஸ்மாவின் அளவு அதிகமாக இருந்தால் விண்வெளி ஆய்வு கலன்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவைகள் என்பது பாதிக்கப்படும்.
தற்போது விக்ரம் லேண்டரின் ரம்பா -எல்பி கருவி பிளாஸ்மா அளவு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது நிலவில் ஆய்வு செய்யும் தொலைதொடர்பு கருவிகளை வடிவமைப்பதில் இன்னும் திறம்பட உதவலாம். தற்போது பிளாஸ்மா அளவை கணக்கீடு செய்த ரம்பா -எல்பி கருவி என்பது திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்பிஎல்/விஎஸ்எஸ்சியில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications