பார்த்தீங்களா அவரை? எங்க ஜாதிதான்! சந்திரயான் 3 வீரமுத்துவேலுக்கு உரிமை கொண்டாடும் பல்வேறு ஜாதிகள்
சென்னை: சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு பல்வேறு ஜாதி அமைப்புகள் உரிமை கொண்டாடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிலவின் தென் பகுதிக்கு செல்வது தொடர்ந்து சவாலான விஷயமாகவே இருந்த நிலையில், உலகின் எந்த நாடும் நிலவின் தென் பகுதிக்கு செல்லாத நிலையில்.. இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவில் கெத்தாக கால் பதித்து உள்ளது!

நாசா, ஐரோப்பா ஆகிய நாடுகளும், சீனா போன்ற நாடுகளும் கூட நிலவின் தென் பகுதிக்கு சென்றது இல்லை. நிலவின் தென் பகுதிக்கு செல்லும் நாடுகளின் முயற்சியும் கூட தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. நிலவின் தென் துருவத்தை நெருங்க முயன்றால் கூட போதும்.. விண்வெளி திட்டங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன.
நிலவின் தென் துருவத்தை ஆராய இந்தியாவின் சந்திரயான் 2 மற்றும் ரஷ்யா லூனா 25 திட்டத்தை விண்ணுக்கு அனுப்பி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நேற்று வெற்றிபெற்றது. நிலவின் தென் துருவத்தில் இந்தியா வெற்றிகரமாக கால் பதித்து உள்ளது. இஸ்ரோவின் சந்திரயான் 3 மூலம் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் நிலவில் களமிறங்கி உள்ளது.
சந்திரயான் 3 திட்டம் -வீரமுத்துவேல்: இந்த திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல். இந்த திட்டத்தில் செயல்பட்ட பலர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திரயான் 3 என மூன்று திட்டங்களிலும் திட்ட இயக்குனர்களாக இருந்து இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கியது தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள்தான். முதலில் சந்திரயான் 1 திட்டம் 2008 ல் செயல்படுத்தப்பட்டது.
. இந்த சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். இதன்பின் சந்திரயான் 2 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது இஸ்ரோ இயக்குநர் தமிழரான கே சிவன். அதேபோல் சந்திரயான் 2 திட்டத்தின் திட்ட இயக்குனராக இருந்தவர் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த வனிதா எனும் விஞ்ஞானி ஆவார்.
இந்த நிலையில் தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல். இவர்கள் மூவரும் தமிழர்கள். தமிழ் வழி பாடத்தில் அரசு பள்ளியில் படித்தவர்கள். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர். இந்த நிலையில்தான் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு பல்வேறு ஜாதி அமைப்புகள் உரிமை கொண்டாடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜாதி அமைப்புகள்: பல்வேறு ஜாதி அமைப்புகள் நேற்றில் இருந்து அவருக்கு உரிமை கொண்டாடி வருகின்றன. அவர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த பகுதியில் பெரும்பாலாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஜாதி வீரமுத்துவேலுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் அவரின் பெயர் ஒரு குறிப்பிட்ட ஜாதி போல இருப்பதால் இன்னும் சில தென் மாவட்ட ஜாதி அமைப்புகள் அவருக்கு உரிமை கொண்டாடி வருகின்றன. அவர் பேசும் விதத்தை வைத்து இன்னும் சில ஜாதிகளும் அவருக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர்.
தமிழர் ஒருவர் சர்வதேச மேடையில் இவ்வளவு பெரிய சாதனையை செய்துள்ளார். ஆனால் அதை கொண்டாடாமல் அவரின் ஜாதியை தமிழர்கள், இந்தியர்கள் என்று பலரும் அலசுவது கடுமையான விவாதத்தை, விமர்சனங்களை சந்தித்து உள்ளது.















Click it and Unblock the Notifications