தெளிவா இல்லையே! நிலவில் இந்திய தேசிய சின்னம், இஸ்ரோ லோகோ சரியாக தெரியாதது ஏன்? சோமநாத் விளக்கம்
சென்னை: பிரக்யான் ரோவரின் சக்கரத்தில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோவின் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. இது தெளிவாக தெரியாத நிலையில் அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவலை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
நிலவில் 4வது நாடாக இந்தியா தரையிறங்கி உள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா விண்கலங்களை தொடர்ந்து இஸ்ரோவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. அதோடு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியது.
நிலவில் தரையிறங்கிய இடத்தில் இருந்து விக்ரம் லேண்டர் ஆய்வு செய்தது. பிரக்யான் ரோவர் மெதுமெதுவாக ஊர்ந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்தது. இந்த வேளையில் ரோவரின் பின்சக்கரம் இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோவை அங்கு பதித்து சென்றது. தற்போது லேண்டர், ரோவர் ஆகியவை தங்களின் பணியை 100 சதவீதம் வரை சிறப்பாக செய்து முடித்துள்ளது.
இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவரின் சக்கரங்கள் பதித்த இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும், இஸ்ரோ லோகோ தெளிவாக தெரியவில்லை. இதுபற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளது. இதுபற்றி அவர் கூறியதாவது:
ரோவரின் சக்கரத்தில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோவின் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது தெளிவாக தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் தான். அங்குள்ள மண் தூசியாக இல்லை. மண் இறுக்கமாக உள்ளது.
தரைப்பகுதியில் உள்ள மண் கெட்டியாக உள்ளது. நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணை ஏதோ ஒன்று இறுக்கமாக பிணைத்து வைத்துள்ளது. இது என்ன என்று ஆய்வு செய்ய வேண்டும். அதோடு இது ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. விரைவில் மண் குறித்த ஆய்வுகள் தொடங்கலாம். இதனால் தற்போதைய தகவல் பிந்தைய ஆய்வுக்கு உதவலாம்'' என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications