2 பில்லியன் ஆண்டாக சூரிய ஒளியே படவில்லை.. காவு வாங்கும் நிலவின் தென் பகுதி.. விடாத துரதிஷ்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலவின் தென் பகுதிக்கு செல்வது தொடர்ந்து சவாலான விஷயமாகவே இருக்கிறது. உலகின் எந்த நாடும் இதுவரை நிலவின் தென் பகுதிக்கு செல்லவில்லை.

நாசா, ஐரோப்பா ஆகிய நாடுகளும், சீனா போன்ற நாடுகளும் கூட நிலவின் தென் பகுதிக்கு செல்லவில்லை. நிலவின் தென் பகுதிக்கு செல்லும் நாடுகளின் முயற்சியும் கூட தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. நிலவின் தென் துருவத்தை நெருங்க முயன்றால் கூட.. விண்வெளி திட்டங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைகின்றன.

Chandrayaan 3: Why south pole of the moon is still unlucky? How did Russia fail to reach moon south pole?

நிலவின் தென் துருவத்தை ஆராய இந்தியாவின் சந்திரயான் 2 மற்றும் ரஷ்யா லூனா 25 திட்டத்தை விண்ணுக்கு அனுப்பி தோல்வி அடைந்தது. கடந்த 50 வருடங்களில் நிலவிற்கு ரஷ்யா அனுப்பும் முதல் ஆய்வு திட்டம் ஆகும் இது. இந்த லூனா 25 லேண்டர் நிலவில் உயரம் குறைக்கும் நேரத்தில் அப்படியே கட்டுப்பாட்டை இழந்து விழுந்துள்ளது.

என்ன திட்டம்? தென் துருவத்தில் இந்த 800 கிலோ எடை கொண்ட லூனா 25 தரையிறங்கி சாதனை படைக்க இருந்தது. அதாவது கணக்குப்படி நாளை இந்த லூனா 25 தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால் நேற்றே உயர குறைப்பு செய்யும் போது இது கீழே விழுந்துவிட்டது.நிலவில் இருந்து ஒரு வருடம் ஆய்வு செய்வதுதான் லூனா 25ன் திட்டம் ஆகும்.

அங்கிருந்து மணல் சாம்பிள்களை எடுப்பது,. தண்ணீரை தேடுவது இதன் திட்டமாக இருந்தது. ஏற்கனவே நிலவை சுற்றிக்கொண்டு இருந்த போது இது புகைப்படம் கூட எடுத்து அனுப்பியது.

அவசரம்: இந்தியாவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் முன் வேகமாக இறங்க வேண்டும் என்று லூனா 25 அவசரமாகவே நிலவிற்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இது நிலவை நோக்கி அனுப்பப்பட்டது. இந்தியா போல புவி ஈர்ப்பு விசை , வட்டப்பாதை ஆகியவற்றை பயன்படுத்தி பயணிக்காமல், நேரடியாக நிலவை நோக்கி செல்லும் வகையில் இது அனுப்பப்பட்டது.

ராக்கெட்டை பல காலமாக உருவாக்கி இருந்ததில் இதில் ரஷ்யா எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் கடந்த ஒன்றரை வருடத்தில் வேக வேகமாக லூனா 25 ஐ உருவாக்கி ரஷ்யா அவசரப்பட்டது. அதிலும் இஸ்ரோ சந்திரயான் 3ஐ அனுப்பும் வரை லூனா 25ஐ அனுப்பும் திட்டத்தில் ரஷ்யா இல்லை. சந்திரயான் 3 அனுப்பிய பின்பே திடீரென லூனா 25 அனுப்பும் தேதியை ரஷ்யா முடிவு செய்தது.

இதன் அர்த்தம் நிலவின் தென் பகுதியை தொட்ட முதல் நாடு என்ற பெயர் இருக்க வேண்டும் என்று ரஷ்யா நினைத்தது. நிலவிற்கு மனிதரின் பொருளை இறக்கிய முதல் நாடு ரஷ்யா என்பதால் தென் துருவத்தில் தங்கள் பொருளே முதலில் இறங்க வேண்டும் என்று ரஷ்யா நினைத்தது. இதன் காரணமாகவே சந்திரயான் 3 அனுப்பப்பட்ட பின் அவசர அவசரமாக லூனா 25 அனுப்பப்பட்டது.

இதனால் கடைசி கட்டத்தில் லூனா 25 லேண்டரில் சரியாக ஆய்வுகளை செய்ய முடியவில்லை. இதனால் ஏற்பட்ட பழுதே கடைசியில் லூனா 25 இறங்கும் போது அது தோல்வி அடைய காரணம் ஆகிவிட்டது. லூனா 25 வின் உயரத்தை குறைக்க அதற்கு கொடுத்த கமெண்ட்டை லூனா 25 ஏற்கவில்லை. மாறாக லூனா 25 கமெண்ட்டை தவறாக எடுத்துக்கொண்டு மொத்தமாக போய் நிலவில் விழுந்துள்ளது.

சூரியனே படவில்லை: நிலவின் தென் பகுதியில் உள்ள குழிகளில் 2 பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படவில்லை. லேசான மேற்பரப்பில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது. காரணம் நிலவு அச்சு 88.5 டிகிரி செங்குத்தாக உள்ளது. இதனால் சூரியன் நிலவின் தென் பகுதிக்கு ஒளியை அனுப்ப முடிவது இல்லை. இதனால் நிலவின் தென் பகுதி இன்னமும் ரகசியமாகவே உள்ளது.

இங்கே வெப்பநிலை மைனஸ் 230 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இவை எல்லாம் கருப்பான, ஐஸ் படிந்த, ரகசியமான, மர்மம் நிறைந்த மிகப்பெரிய பள்ளங்கள் ஆகும். இந்த பகுதிக்கு செல்ல முயன்ற ரஷ்யா தோல்வி அடைந்துவிட்டது. சந்திரயான் 2 திட்டமும் தோல்வி அடைந்துவிட்டது. அறிவியலின் துரதிஷ்டம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தை சந்திரயான் 3 அடைந்து.. முதல் வெற்றியை நாளை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+