CHINA வுக்கு பதிலா CHINAA ன்னு எழுதுங்க.. சீனா பொருளாதாரம் காலி.. வாசகரின் பலே ஐடியா!
கண்ணாடியை திருப்பி வச்சா ஆட்டோ ஓடுமா என்று சிலர் கேட்கலாம்.
சென்னை: சீனா பொருட்களை புறக்கணிப்போம் என்ற முழக்கம் எங்கும் எழுந்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம் நாம் எழுதும் போது CHINA வுக்கு பதிலா CHINAA என்று எழுதினாலே போதும் தானாக சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று ஐடியா கொடுத்திருக்கிறார் ஒரு வாசகர்.
Recommended Video
அவர் சொல்வது படி China என்றால் எண் கணிதப்படி 6 வருகிறது. இது சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட எண். அதுவே Chinaa என்று எழுதினால் கூட்டுத்தொகை 7 வரும். இது கேதுவின் ஆதிக்கம் கொண்ட எண் என்பதால் சீனாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு வரலாம் என்று கூறியுள்ளார் அந்த வாசகர்.
கடந்த 15ஆம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி கூடாரம் அமைத்ததற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பட்டியலை சீனா வெளியிடவில்லை.
இந்திய வீரர்களை திட்டமிட்டு கொன்ற சீனாவிற்கு எதிராக மக்கள் திரும்பி உள்ளனர். இனி சீன தயாரிப்பு பொருட்களை வாங்குவதில்லை என்று பலரும் முடிவு செய்துள்ளனர். பல்வேறு வணிக கூட்டமைப்புகளும் சீன தயாரிப்பு பொருட்களை இனி விற்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளன. பல்வேறு கட்சிகளும் சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிப்போம் என்று களம் இறங்கி உள்ளன.

சீனாவை புறக்கணிப்போம்
சீனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் விற்கப்படும் சீன பொருட்களின் பட்டியல், இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சீன தயாரிப்புகளின் பட்டியல், சீன தயாரிப்புகளுக்கு மாற்று ஆகியவற்றை கூகுள் சர்ச் என்ஜினில் இந்திய மக்கள் அதிகம் பேர் தேடி வருகிறார்கள். அத்துடன் சீன ஆப்கள், சீன ஆப்கள் இந்தியா, சீன பொருட்கள் இந்தியா என்று தேடுகிறார்கள்.

சீனா தயாரிப்பு பொருட்கள்
மக்கள் பலரும் இனி சீன பொருட்களை இனி வாங்குவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் தொலைபேசிகளில் இருந்து டிக்டாக் ஆப்பை நீக்கினர். மேலும் தொலைபேசிகளிலிருந்து சீனாவின் பல்வேறு மொபைல் ஆப்களை
நீக்கினார்கள். இதனிடையே புறக்கணிக்கப்பட வேண்டிய 500 க்கும் மேற்பட்ட ‘மேட் இன் சீனா' தயாரிப்புகளின் பட்டியலை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

சுக்கிரன் ஆசி உள்ள சீனா
சீனா நாட்டிற்கு சுக்கிரன் ஆசி நிறைய உள்ளதால்தான் அங்கிருந்து நிறைய பொருட்கள் உற்பத்தியாகி பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. சுக்கிரன் நன்றாக இருந்தால் அழகு சாதனப்பொருட்கள், நவரத்தின பொருட்கள்,வாசனை திரவியங்கள்
தயாரிப்பு என பல தொழில்களில் வெற்றி பெறலாம். சீனாவை China என இப்படி எழுதினால் கூட்டுத்தொகை 15 = 6 வருகிறது. இதையே நாம் இனி CHINAA என இன்னொரு A சேர்த்து எழுதினால் கூட்டுத்தொகை 16 = 7 வரும். இது கேதுவின் ஆதிக்கம்
கொண்ட எண் ஆகும். கேதுவின் ஆதிக்கம் அதிகமானால் சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நம் நாட்டிற்கே வெற்றி கிடைக்கும் என்று ஐடியா கூறியுள்ளார் விஸ்வநாதன் என்ற அந்த வாசகர்.

பெயரை மாற்றினால் சரி வருமா
நிறைய பேர் தங்களின் பெயரை இன்சியலை சேர்த்தும் ஒரு எழுத்தை சேர்த்தும் எழுதுவார்கள். எண் கணிதப்படி பலருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. சிலருக்கு பெயர் மாறியதால் மிகப்பெரிய தோல்வியும் ஏற்பட்டிருக்கிறது. இதே பாணியில் சீனாவை மண்ணைக் கவ்வ வைக்க நாம் ஒவ்வொருவரும் இனி CHINAA என்று எழுதினால் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.. காசா பணமா? ஒரு A சேர்த்துதானே
எழுதப்போகிறோம் பார்க்கலாம்.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications