Time to Lead போஸ்! "மக்கள் நினைக்காமல் மாற்றம் நடக்காது!" ஜனநாயகன் பாடல் Decodeஐ ஆரம்பித்த ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் இப்போது வெளியாகியுள்ளது. "ஒரு பெயரே வரலாறு.." எனத் தொடங்கும் இந்தப் பாடலை அனிருத் இசையமைக்க விவேக் எழுதியிருக்கிறார். பாடல் வெளியான கொஞ்ச நேரத்திலேயே இதை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்த நிலையில், இன்னொரு பக்கம் பாடலையும் டீகோட் செய்து வருகிறார்கள்.
நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துவிட்டார். 2026 சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். அரசியலுக்கு வந்துவிட்டதால் அவர் நடிப்பிற்கு முழுமையாக முழுக்க போட இருக்கிறார். கடைசி படமாக அவர் ஹெச் வினோத் இயக்கத்தில் "ஜனநாயகன்" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகிறது.

விஜய் பாடல்
பட ரிலீஸுக்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் சூழலில், புரோஷமன் வேலைகளையும் படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர். விஜய்யின் கடைசி படமாக இது இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால்.. படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தின் முதல் சிங்கிளான தளபதி கச்சேரி பாடல் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தச் சூழலில் தான் படத்தின் 2வது சிங்கிள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி "ஒரு பெயரே வரலாறு" என்ற பாடல் இன்று மாலை வெளியானது. பாடல் வெளியான உடனேயே இதை நேரத்திலேயே இந்தப் பாடலை செல்நெறி செய்ய ஆரம்பித்தனர்.
டிகோட்
மேலும், வழக்கம் போல நெட்டிசன்கள் இந்த பாடலின் டீகோடையும் ஆரம்பித்தனர். ட்விட்டர் முழுக்கவே ஒரு பெயரே வரலாறு பாடலின் டீகோட் தான் முழுக்க முழுக்க நிரம்பி இருக்கிறது. விஜய்யின் டான்ஸ் கொஞ்சம், நிறைய அனிமேஷன் என சேர்ந்து வந்துள்ள இந்தப் பாடலைப் பிரித்துப் பிரித்து ஒவ்வொரு அர்த்தத்தைக் கண்டுபிடித்து வருகிறார்கள்.
மக்கள் நினைக்காமல்
இந்த பாடல் தொடக்கமே.. "ஒரு பெயரே வரலாறு.. அழிச்சாலும் அழியாது.. அவன் தானே ஜனநாயகன்.. நம்ம மக்கள் நினைக்காமல்.. ஒரு மாற்றம் நடக்காது.. தர வந்தான் தரமானவன்" என்று வருகிறது. மக்கள் ஏற்கனவே நினைத்துவிட்டனர்.. மாற்றம் 2026ல் ரெடியாகிவிட்டது என்றும் விஜய் ரசிகர்கள் உணர்ச்சி பொங்க ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள். மேலும், "ஊரே காணாத மக்கள் மன்னர் பிறந்தாரு.. தமிழ் மண்ணின் தரமானவன்" என்ற லைனையும் குறிப்பிடும் ரசிகர்கள், விஜய் மன்னராக உருவெடுக்கச் சில மாதங்களே இருப்பதாகவும் சொல்லி ட்வீட் செய்து வருகிறார்கள்.
டைம் டு லீட்
மேலும், இந்த பாடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தலைவா படத்தின் போஸும் இடம் பெற்று இருக்கிறது. தலைவா படம் தான் விஜய் அரசியல் தொடர்பாக நடித்த முதல் படம். அதில் வரும் Time to lead என்ற ஒற்றை வாசகத்திற்காகவே அந்தப் படம் ஏகப்பட்ட சிக்கல்களைச் சந்திருந்தது. அந்தப் படத்தின் போஸ் கூட இதில் இடம்பெற்று இருக்கிறது.
மேலும், இடத்தில் ஒரு போர்ஷனில் விஜய் கலக்கலாக டான்ஸ் ஆடியிருப்பார். வெள்ளை சட்டை, அட்டகாசமான கூலிங் கிளாஸுடன் விஜய் போடும் டான்ஸ் வேற லெவல் என விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். மேலும், இந்த 20 நொடி வீடியோவும் சோஷியல் மீடியாவை தெறிக்க விடுகிறது. இப்படி பார்ட் பார்ட்டாக விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கும் இந்தப் பாடல் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க.!
-
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய்












Click it and Unblock the Notifications