மாற்றத்தை தவிர்க்க முடியாது: காவி உடை தரித்து வடக்கே போவதை ட்விட்டரில் சூசகமாக அறிவித்த குஷ்பு!
சென்னை: மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்று பாஜகவில் தாம் இணையப் போவது குறித்து ட்விட்டரில் காவி உடையுடன் நடிகை குஷ்பு அறிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார் குஷ்பு. ஆனால் காங்கிரஸ் கட்சியில் தீவிர செயல்பாடுகளில் ஈடுபடாமல் ஒதுங்கியும் இருந்தார்.

இடைவிடாத பாஜக அழைப்பு
இதனால் அவரை பாரதிய ஜனதா தலைவர்கள் தங்கள் கட்சியில் சேர அழைப்பு விடுத்து வந்தனர். இதனை ஏற்காமல் நிராகரித்தே வந்த குஷ்பு கடந்த வாரம்தான் காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

காங். பற்றி கருத்து இல்லை
ஆனால் இப்போது காங்கிரஸை விட்டு பாஜகவில் அவர் இணைவது உறுதியாகி உள்ளது. டெல்லி செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் காங்கிரஸில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு எந்த கருத்தும் சொல்வதற்கில்லை என பதில் சொல்லிவிட்டார் குஷ்பு.

பாஜகவில் திங்களன்று ஐக்கியம்
டெல்லியில் ஜேபி நட்டா முன்னிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு குஷ்பு, பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது. இதனிடையே சனிக்கிழமையன்று குஷ்பு ட்விட்டரில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என காவி கலர் உடையுடன் போட்ட ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

காவி உடையில் குஷ்பு போட்ட ட்வீட்
குஷ்பு சனிக்கிழமையன்று போட்ட ட்விட்டர் பதிவில், என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நமது பார்வையில் புரிதல்கள், விறுப்பு வெறுப்புகள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. நமது சிந்தனைகளும் எண்ணங்களும் புதிய வடிவங்கள் பெறுகின்றன. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என குறிப்பிட்டிருக்கிறார். பாஜகவை சேர்ந்த நாராயண் திருப்பதி, புரிந்து கொள்ள முடிகிறது எனவும் இதில் பதிவிட்டிருக்கிறார். குஷ்பு பாஜகவில் இணைவதை உறுதி செய்கின்றன அவரது பதிவும் பாஜகவினரின் கமெண்ட்டுகளும்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications