அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும்! நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்றம் வரும்.. முழங்கிய எடப்பாடி
சென்னை: திமுகவிற்கு இறங்குமுகம் ஆரம்பித்துவிட்டது.. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும் என்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்றம் வரும் என்றும் அவர் கூறினார்.
சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- அதிமுக செயற்குழு, பொதுக்குழுவால் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குகிறது. மதுரை மாநாடு பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. அதிமுக மதுரை மாநாடு போல் இனி யாராலும் மாநாடு நடத்த முடியாது. மதுரை மாநாட்டை விமர்சித்த உதயநிதி ஸ்டாலினால் திமுக இளைஞரணி மாநாட்டை நடத்த முடியவில்லை.

மூன்று முறை ஒத்திவைத்துவிட்டனர். இதனால் இந்த மாநாட்டை பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி, எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. பல சோதனைகளை சந்தித்ததும் அதிமுக தான்.. அதனை வெற்றியாக்கியதும் அதிமுக தான்.. தமிழ்நாட்டிலே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக தான்..
கொரோனா போன்ற காலக்கட்டத்திலும் அதிமுக அரசு மக்களை காத்தது. ஆனால் செயலற்ற ஆட்சியாக திமுக அரசு உள்ளது. ஊழல் செய்வதில் தான் திமுக சாதனை செய்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் எத்தனை பேர் எங்கு இருப்பார்களோ அங்கு இருப்பார்கள். திமுகவிற்கு இறங்குமுகம் ஏற்பட்டு விட்டது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்றம் வரும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications