Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிமேல் பட்டா மாறுதல் ஈஸி.. செல்போன் நம்பர் இருக்கா? வருவாய்த்துறை உத்தரவு பாருங்க.. பட்டா முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தானியங்கி முறை பட்டா மாறுதல் பணிக்காக, பத்திரப்பதிவில் சில முக்கிய அறிவுறுத்தல்களை பதிவுத்துறை வழங்கியிருக்கிறது.

முன்பு போல இல்லாமல், தற்போது பத்திரப்பதிவு துறையில் ஆன்லைன்மயமமாக்கப்பட்டிருக்கிறது.. அதேபோல, பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் சொத்து விவரங்கள் அடிப்படையில் தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தானியங்கி முறை: வரும் 15ம் தேதி முதல் 100 சதவீதம் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. இந்த தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பதிவுத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

Patta automatic system Tamil Nadu Registration Department Revenue Department Patta name change

உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நில கிரையங்களில் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட உடனே பட்டா மாற்றம் தானியங்கியாக மேற்கொள்ளப்படும். எனவே, கிரையம் பெறுபவர் துரிதமான பட்டா மாறுதல் சேவையைப் பெற தனது கைப்பேசி எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.

கிரையம்: இந்த ஆவணத் தயாரிப்பின் போது சில விவரங்களை சரிபார்த்துக் கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்யும் நபர் பெயரில் பட்டா இருப்பதை தவறாமல் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்படும் சொத்து விவரமும் அளவுகளும், நான்கெல்லைகளும் வருவாய்த்துறை நடப்பு சான்றுகளுடன் ஒத்திருப்பதை உறுதி செய்து கொண்டு அதன்படி ஆவணம் தயாரிக்க வேண்டும். முன் ஆவணச் சொத்து இதர விவரங்களை சரிபார்த்து ஆவணம் தயாரிக்க வேண்டும். சொத்து வரியின் கட்டண ரசீது, தண்ணீர் வரி ரசீது, வரிவிதிப்பு பெயர்களை சரிபார்த்து ஆவணம் தயாரிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள்: பத்திரப்பதிவின்போது, சரியான மொபைல் போன் எண்ணை அளிக்க வேண்டும் என்று வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. காரணம், தானியங்கி முறை பட்டா மாறுதல் திட்டத்தில், பெரும்பாலான விண்ணப்பங்கள் பாதியில் முடங்குகின்றன. இந்த விண்ணப்பங்களில், சொத்து வாங்குவோர் தங்களது சரியான செல்போன் போன் எண்ணை கொடுக்காமல் இருப்பதே, விண்ணப்பங்கள் முடங்க காரணம் என்று பிரதானமாக தெரியவந்திருக்கிறது.

ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவுக்கு விபரங்களை உள்ளீடு செய்யும்போது, சொத்து வாங்குவோரின் உண்மையான மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

பட்டா மாறுதல்: அதனால், பத்திரப்பதிவு பணியின் போது, மொபைல் போன் எண் விபரத்தை சரியாக பதிவிடுவதை, சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது மக்களும் இதில் பொறுப்புடன் நடக்க வேண்டும்.. அப்போது தான் பட்டா மாறுதல் தொடர்பாக, SMS தகவல்களை பெற முடியும்... இதன் அடிப்படையிலேயே தொடர் நடவடிக்கைகள் எடுக்க முடியும்" என்கிறார்கள் அதிகாரிகள்.

அந்த அளவுக்கு பட்டாக்கள், முக்கியத்துவம் பெறுகின்றன.. அதாவது, பத்திரங்கள் முக்கியமா? பட்டா முக்கியமா? என்று பார்த்தால், பத்திரத்தைவிட பட்டாக்களே என்பது மிகவும் முக்கியமாகும்...

காரணம், சொத்தை விற்பவற்கும் வாங்குபவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, , அரசு பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி பத்திரப்பதிவு தொடர்பான பணிகளை முறைப்படுத்தி வருகின்றது. அதன்படி, நில உடைமை தகவல்களை பாதுகாக்கும் துறையில் இருந்து, ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளதென்று பெறப்படும் ஆவணத்தகவலாக பட்டாக்கள் உள்ளன.

பட்டாக்கள்: அதுமட்டுமல்லாமல், பட்டாக்களே, பெரும்பாலான சமயங்களில், சட்டப்பூர்வமான உடைமை என்பதை நிறுவ முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.. இந்த பட்டாக்கள்தான், உங்களின் சொத்து அடையாள ஆவணமாகும்.. இது இருந்தால், உங்களுடைய சொத்துக்களை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது..

அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்க முடியும் என்பதால், அதே சொத்தை எல்லோருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.. ஆகவே, சொத்தை பதிவு செய்யும் நபர், பத்திரப் பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் பெற்றுக்கொண்டால், எந்த குழப்பமும், பிரச்சனையும் பிற்காலத்தில் வராது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+