அதிமுக பொதுக்குழு: நுழைவு வாயிலில் தள்ளுமுள்ளு.. முண்டியடித்த தொண்டர்கள்.. கீழே விழுந்ததால் பரபரப்பு
சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் செல்லும் மண்டபத்தின் வாயிற்பகுதியில் முண்டியடித்துக்கொண்டு தொண்டர்கள் செல்ல முயன்றதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உண்டானது. தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றதில் அவர்கள் கீழே விழுந்தனர். அவர்களுக்கு பின்னால் வந்தவர்கள் கீழே விழுந்துவர்களை மிதித்து தாண்டியபடி சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அழைப்பிதழ் இருந்து எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. அவைத்தலைவர் தமிழ் உசேசன் உடல்நலக்குறைவு காரணமாக அப்செண்ட் ஆனதால், தற்காலிக அவைத்தலைவராக கே.பி முனுசாமி செயல்படுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்படி செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்
இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர், சிறப்பு அழைப்பாளர்கள் என 4500 முதல் 5000 பேர் வருகை தந்துள்ளனர். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் சிலர் மண்டபத்திற்கு வெளியே காத்து நின்றனர். அவர்களை உள்ளே விடாமல் பாதுகாவலர்கள் தடுப்புகள் அமைத்து நிற்க வைத்திருந்தனர்.
தடுப்புகளை தாண்டி குதித்து
பொதுக்குழுவுக்கு ஒரு வாயிற்பகுதி எனவும், செயற்குழுவுக்கு ஒரு பகுதி எனவும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு ஒரு பகுதி எனவும் 3 பிரிவுகளாக பிரித்து நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் செல்லும் பகுதியில் திடண்டிருந்த அதிமுக தொண்டர்கள் உள்ளே செல்ல அனுமதிக்ககோரி முண்டியடித்தனர். திடீரென தடுப்புகளை தாண்டி குதித்தனர்.
தள்ளுமுள்ளு, தொண்டர்கள் காயம்
இதில் சில கீழே விழுந்ததில் பின்னால் வந்தவர்கள் அவர்கள் மீது மிதித்தும், நிலைதடுமாறி அவர்களும் கீழே விழும் நிலைமை உண்டானது. உடனே பாதுகாவலர்கள் ஓடி வந்து தடுத்தனர். கீழே விழுந்ததில் சிலர் லேசான காயமடைந்தனர். அவர்களை பாதுகாவலர்கள் மீட்டனர். எனினும் தொடர்ந்து உள்ளே செல்ல அனுமதிக்க கோரி தொண்டர்கள் முண்டியடித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு புறம் செயற்குழு கூட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில், எங்களிடமும் பாஸ் இருக்கிறது, உள்ளே அனுமதியுங்கள் என தொண்டர்கள் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு முண்டியடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நிர்வாகிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அழைப்பு கடிதம் இருக்கிறது
எங்களிடமும் அழைப்பு கடிதம் இருக்கிறது, அப்படி இருந்தும் ஏன் எங்களை உள்ளே அனுமதிக்க மறுக்குறீர்கள் என தொண்டர்கள் ஆவேசமடைந்து பாதுகாவலர்களிடம் கேள்வி எழுப்பினர். நீண்ட நேரமாக கேட்டுக்கொண்டே இருந்த போதிலும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே பொதுக்குழு தொடங்கி நடக்க ஆரம்பித்தது. இதனால் திடீரென அவர்கள் தடுப்புகளை மீறி உள்ளே ஏறி குதித்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் முன்னால் நின்றுகொண்டிருந்த தொண்டர்கள் சில கீழே விழுந்தனர். அவர்கள் மீது ஏறியும், தாண்டி குதித்தும் தொண்டர்கள் உள்ளே வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.
-
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்?












Click it and Unblock the Notifications