மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு
சென்னை: பெரம்பூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த நிலையில், அவரைப் பார்க்க தவெக தொண்டர்கள் டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தொண்டர்களை கட்சியினரே கீழே இறக்கினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தேர்தலில் போட்டிடும் 234 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் விஜய்.

தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த கையோடு, பெரம்பூரிலிருந்து தனது பரப்புரை பயணத்தை தொடங்கினார் விஜய். அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியதால் அந்தப் பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று வெளிப்படையாகவே கூட்டணிக்காக பிற கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்த போதிலும், தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை. நேற்று 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை ஒரே கட்டமாக வெளியிட்டார். அதன்படி, சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக விஜய் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து இருந்தது. இதையடுத்து, மீண்டும் விஜய் சார்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சென்னை பெரம்பூர் தொகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி, வியாசர் பாடியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
விஜய் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவரை பார்க்க அதிக அளவில் தவெக தொண்டர்கள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு இடையூறு இன்றி வந்து செல்ல விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டது. எனினும் விஜய் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு சென்றபோதிலும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பெரம்பூரில் விஜயை பார்க்க சுவர் எகிறி குதித்து டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினரை, அங்கிருந்தவர்கள் கீழே இறக்கினர். சென்னை நகரம் முழுவதும் டிரான்ஸ்ஃபார்மர்களைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விஜய், ஒவ்வொரு முறையும் கூட்டத்திற்கு செல்லும்போது, அவரின் வாகனத்தின் பின்னால், பக்கவாட்டில் ரசிகர்கள், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. இது கட்சிக்கும், விஜய்க்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது. விஜய் வேலூரில் தன்னை பின்தொடர வேண்டாம் எனக் கெஞ்சியும் இன்றும் ஏராளமானோர் அவரைப் பின்தொடர்ந்து சென்று விபத்துகளில் சிக்கி உள்ளனர்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications