Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார்ரா அந்த பையன்? நண்பனை கொல்ல சாட்ஜிபிடி கிட்ட ஐடியா கேட்ட சிறுவன்.. கிளாஸ் ரூமிலேயே செம டுவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைஞர்கள் பெரும்பாலானோர், தங்கள் தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களை இப்போதெல்லாம் சாட்ஜிபிடி-யுடன் பகிர்ந்து கொள்கிறார்களாம்.. ஆனால், இந்த உரையாடல்களுக்கு வழக்கமான ரகசியப் பாதுகாப்பு கிடைக்காது என்று ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் ஏற்கனவே எச்சரித்திருப்பது நினைவிருக்கலாம். இந்நிலையில், அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் சாட் ஜிபிடி என்கிறார்கள்.. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடம் கேள்விகளையோ, தகவல்களையோ தந்து நமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியும்..

ChatGPT 13 year old student us 13

சாட்ஜிபிடி கூகுள்

சாட் ஜிபிடியும் கூகுளை போலத்தான்.. இரண்டுமே தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கக்கூடியவை தான். ஆனால், சாட்ஜிபிடியில் நாம் ஒரு கேள்வி கேட்டால், மனிதர்கள் பதிலளிப்பதைபோலவே நமக்கு பதிலளிக்கும்.

எனவேதான், இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் சாட்ஜிபிடியை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.. இதனால் சாட்ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது.

அந்தவகையில், சாட்ஜிபியிடம் சிலர் கேட்கும் வித்தியாசமான கேள்விகளும், தகவல்களும் இணையத்தில் வைரலாவதுண்டு..

லாட்டரி அடித்த பெண்

சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தது.. கலிபோர்னியா பவர்பால் லாட்டரி குலுக்கல் நடந்தபோது, 1,50,000 டாலர் மதிப்பு கொண்ட லாட்டரியில் எந்த டிக்கெட் நம்பரை தேர்வு செய்வது என்பதில் கேரி எட்வர்ட்ஸ் என்ற பெண்ணுக்கு குழப்பம் வந்துவிட்டது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், சாட்ஜிபிடியிடம் ஐடியா கேட்டுள்ளார்.. உடனே சாட்ஜிபிடியும் சில லாட்டரி நம்பர்களை எடுத்து தந்துள்ளது..

அந்த நம்பரை அப்பெண் தேர்வு செய்வு தந்தார்.. கடைசியில் 2 நாள் கழித்து, அந்த பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.. அவர் எடுத்து தந்த லாட்டரிக்கு பரிசு விழுந்திருப்பதாக மெசேஜ் வரவும் திக்குமுக்காடிப் போய்விட்டார்.. அதாவது நம்ம ஊர் மதிப்பு ரூ.1 கோடியே 32 லட்சத்தை பரிசாக பெற்றார் அந்த பெண். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் ஆச்சரியமாக அப்போது பேசப்பட்டது.

13 வயது பள்ளி மாணவன்

இதோ இப்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் இதே அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடந்துள்ளது.. அம்மாநிலத்தில் டெலாண்டு என்ற இடத்தில் சவுத்வெஸ்டர்ன் நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவன், தன்னுடைய நண்பரை எப்படி கொலை செய்வது என்று, ChatGPTயிடம் கேட்டிருக்கிறான்.. அதுவும் கிளாஸ் நேரத்தில், பள்ளியில் வழங்கிய கம்ப்யூட்டரிலேயே இப்படியொரு கேள்வியை கேட்டுள்ளான்.

ஆபத்தான கேள்வி - அலர்ட் மெசேஜ்

மாணவனின் இந்த செயலானது, அப்பள்ளியின் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பில் (digital monitoring system) உடனடியாக பதிவானது.. அதாவது, மாணவர்கள் யாராவது, ஆபத்தான கேள்விகளை கேட்டால், அது தானாகவே பள்ளி நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் அலர்ட் மெசேஜை தந்துவிடுமாம்.. அதுபோல சாப்ட்வேர் அந்த கம்ப்யூட்டரில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறதாம்.

இது தெரியாமல் அந்த மாணவன், தன்னுடைய நண்பனை கொலை செய்வது பற்றி ஐடியா கேட்கவும், உடனே பள்ளி நிர்வாகத்துக்கும், போலீசாருக்கும் அலர்ட் மெசேஜ் பறந்தது.. அடுத்த சில நிமிடங்களிலேயே போலீசார், அந்த பள்ளிக்கு வந்துவிட்டார்கள். சம்பந்தப்பட்ட மாணவனையும் கைது செய்து விசாரணையும் நடத்தினர்.

அப்போது மாணவன், "யாரையும் கொலை செய்யும் நோக்கம் எனக்கில்லை, சும்மா கிண்டலாகத்தான் அப்படி கேள்வி கேட்டேன்" என்று போலீசாரிடம் விளக்கம் தந்துள்ளான்..

இறுதியில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை, பள்ளிகளில் மாணவர்கள் பொறுப்புடனும், கவனமுடனும் கையாளப்பட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி விட்டு சென்றார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+