போதைப்பொருள் டீலர் கெவின் உடனான சாட் மூலம் மாட்டிக்கொண்ட கிருஷ்ணா.. பல பிரபலங்களும் சிக்க வாய்ப்பு!
சென்னை: போதைப் பொருள் சப்ளையர் கெவின் என்பவருடன் நடத்திய வாட்ஸ்அப் உரையாடலே நடிகர் கிருஷ்ணா சிக்கியதற்கு முக்கிய காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கைதான கெவினிடம் போதைப் பொருள் வாங்கிய, பல சினிமா பிரபலங்களும் பிடிபடலாம் எனக் கூறப்படுகிறது.
போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் டீலர் கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விவகாரம்
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா போலீசாரிடம் பிடிபட்ட நிலையில் அவரிடம் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரசாத், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நபர்களுடன் கிருஷ்ணா தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டதாகவோ, போதைப் பொருள் விநியோகத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
நடிகர் கிருஷ்ணா
மேலும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீடு மற்றும் கார்களிலும் இன்று காலை போலீசார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். அப்போது தனக்கு இரைப்பை பிரச்சனைகள் இருப்பதாக கிருஷ்ணா தெரிவித்ததை அடுத்து, அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துச் சென்றனர்.
கடந்த ஆண்டு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படுவது உள்ளிட்ட தனது உடல்நிலை பிரச்சினைகளுக்கான மருத்துவ சான்றிதழ்களையும் நடிகர் கிருஷ்ணா போலீசாரிடம் கொடுத்திருக்கிறார். உயர் ரக போதை பொருளை உபயோகப்படுத்தும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் நடிகர் கிருஷ்ணா போலீசாரிடம் கூறி உள்ளார்.
கோடு வேர்டு
அதேசமயம், நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றத்தில் Code Word பயன்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. நண்பர்களுடன் அவர் செய்த சாட்டிங்கில் ரகசிய சங்கேத குறியீடு வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதை கண்டுபிடித்த போலீசார், 2020 முதல் கிருஷ்ணாவின் செல்ஃபோனில் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணா போனில் கெவின் என்பவரிடம் அவர் போதைப்பொருள் தொடர்பாக கோட் வேர்டு பயன்படுத்தி பேசியது தெரியவந்தது. இதையடுத்து, வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜெஸ்வீர் என்கிற கெவின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
போதைப்பொருள் டீலர் கெவின்
அப்போது கெவின் வீட்டில் இருந்து கொக்கைன், மெத்தபெட்டமைன், எம்.டி.எம்.ஏ, ஓஜி கஞ்சா, கஞ்சா, ஓசிபி, சிப்லாக் கவர் உள்ளிட்ட பொருட்களும், எடை போடும் மெஷின், லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிருஷ்ணா, கெவினிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொண்டுள்ளார். மேலும் போதைப்பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து அது சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணா கெவின் உரையாடல்
இவர்களுடைய வங்கி பணப் பரிவர்த்தனை மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் சப்ளையர் கெவின் உடன் நடத்திய வாட்ஸ்அப் உரையாடல் மற்றும் ஜி-பே தொடர்பே நடிகர் கிருஷ்ணா சிக்கியதற்கு முக்கிய காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கெவினிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான கெவினிடம் போதைப் பொருள் வாங்கிய, பல சினிமா பிரபலங்களும் வரும் நாட்களில் பிடிபடலாம் எனக் கூறப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications