தொழிலதிபர் மனைவி, மகள் பலாத்காரம்.. பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள சதுர்வேதி சாமியார் ஆஜராக உத்தரவு!
சென்னை: தொழிலதிபர் மனைவி, மகளை பாலியல் பலாத்காரம் செய்து கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த போலிச் சாமியார் சதுர்வேதி ஜூலை 31ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் பகுதியில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தார் சதுர்வேதி சாமியார். வெங்கட சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட சதுர்வேதி சாமியார் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தனது அறக்கட்டளை அலுவலகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்.

தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறி பக்தர்களை ஈர்த்து வந்தார். அரிசியை வெண்பொங்கலாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு சித்து விளையாட்டுகளையும் இவர் செய்து வந்தார். இவருக்கு பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் உண்டு. அவர்களில் தொழிலதிபர்கள் பலரும் அடக்கம்.
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழில் ரீதியாக தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க சாமியார் சதுர்வேதியை நாடினார். தொழிலதிபரின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி அவரது வீட்டிற்கு சென்ற சாமியார் சதுர்வேதி பல்வேறு பூஜைகளை செய்தார். அப்போது தொழிலதிபரின் மனைவியும், அவரது 16 வயது மகளும் சாமியாருக்கு பக்தர்கள் ஆனார்கள்.
தொழில் பிரச்சனையை தீர்ப்பதாக கூறி தொழிலதிபரின் வீட்டிற்குள் புகுந்த சாமியார் சதுர்வேதி, அந்த வீட்டின் கீழ்தளத்திலேயே எப்போதும் குடியிருக்கத் தொடங்கினார். வீட்டை அபகரித்ததோடு, தொழிலதிபரின் மனைவியையும், மகளையும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
தனது அறைக்குள்ளேயே அவர்கள் இருவரையும் அடைத்து வைத்து, விசேஷ பூஜை என்ற பெயரில் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சதுர்வேதி சாமியார். இதை அறிந்த தொழிலதிபர், சாமியார் சதுர்வேதியை தனது வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தினார். இதையடுத்து சாமியார் சதுர்வேதி தொழிலதிபரின் மனைவியையும், மகளையும் ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் தனது மனைவியையும், மகளையும் மீட்டுத்தரும்படி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, . கற்பழிப்பு, கடத்தல், சிறை வைத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சாமியார் சதுர்வேதி மீது 2004-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சாமியார் சதுர்வேதியிடம் இருந்து தொழில்அதிபரின் மனைவியும், மகளும் மீட்கப்பட்டனர். குண்டர் சட்டத்தின் கீழ் சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க சதுர்வேதி விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2016-ஆம் ஆண்டு சதுர்வேதி சாமியார் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சாமியார் சதுர்வேதி மீது சென்னை மகளிர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்தது. ஆனால் ஜாமீனில் வெளியே வந்த சாமியார் சதுர்வேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.
சதுர்வேதி கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. ஆனால் போலீசாரால் சாமியார் சதுர்வேதி எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2018ஆம் ஆண்டு அறிவித்தனர். சாமியார் சதுர்வேதி வழக்கு விசாரணையை சந்திக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தொழிலதிபர் மனைவி, மகளை கடத்திய வழக்கில் சதுர்வேதி சாமியார் வரும் ஜூலை 31ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications