புரட்சியாளர் சே குவேராவின் மகள்,பேத்தி சென்னை வருகை- விமான நிலையத்தில் இடதுசாரிகள் உற்சாக வரவேற்பு!!
சென்னை: புரட்சியாளர் சே குவேராவின் மகள் மற்றும் பேத்தி ஆகியோர் இன்று சென்னை வருகை தந்தனர். சென்னை விமான நிலையத்தில் இடதுசாரி கட்சியினர் சே குவரேவின் மகள், பேத்திக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அர்ஜெண்டினா எனும் நாட்டில் பிறந்து மருத்துவராக உருவாகி லத்தீன் அமெரிக்க நாடுகளின் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் புரட்சியாளர் சே குவேரா. கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து விடுதலையை வென்றெடுத்து அரசாங்க அமைச்சராகவும் பணியாற்றியவர்.

இன்றைய உலகில் புரட்சி என்பதன் முகமாக இருப்பவர் சே குவரா. அத்தகைய புரட்சியாளர் சே குவரேவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேரா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியா வருகை தந்துள்ளனர். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை வருகை தந்தனர் அலெய்டாவும் எஸ்டெஃபானியும். இருவருக்கும் சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பாக உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சென்னையில் நாளை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அலெய்டா, எஸ்டெஃபானி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கேரளா முன்னாள் அமைச்சர் பேபி, திமுக எம்பியும் அக்கட்சி துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் அலெய்டா குவேரா பங்கேற்று பேசினார். அவர் தமது உரையில், கறுப்பின மக்களோடு, ஸ்பானிஷ், பூர்வகுடிகள், சீனர்கள் இணைந்த கலவையானது கரீபியன் கலாச்சாரம். இந்த கரீபியன் கலாசாரமே என்னுடையது. எமது வாழ்வியலானது உணவு வாங்குகிற பொடீகா எனும் கடைகளுக்குச் சொந்தக்காரர்களான ஸ்பானிஷ் மக்களாலும், ஆடைகளை சலவை செய்கிற உலர்சலவையகங்களுக்குச் சொந்தக்காரர்களான சீனர்களாலும் சொத்துகளே இல்லாத கறுப்பின மக்களா லும் உருவாக்கப்பட்டது. கியூபக்கலாச்சாரம், இப்படியாகத்தான் பிறந்தது. ஒவ்வொரு கலாச் சாரமும் அதன் தொன்ம அறிவோடு தொடர்புடைய ஏதாவது ஒன்றை வழங்கியுள்ளது என்பது உண்மையே என பேசியிருந்தார்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications