சென்னையில் நாளை மின்தடை.. எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது என்பது குறித்து முழு விவரம்
சென்னை: சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது. கோவிலம்பாக்கம் பகுதியில் ராகவா நகர் (எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு), பால்வாடி, மேடவாக்கம் மெயின் ரோடு, கடப்பாக்கல், வைத்தியலிங்கம் நகர், ராஜிவி நகர் 6-வது தெரு, அப்பல்லோ விடுதி, ஸ்ரீராம் பிளாட் உள்பட பல பகுதிகளிலும். ஐயப்பன் தாங்கல் பகுதியில் காட்டுப்பாக்கம், செந்துராபுரம், ஸ்ரீநகர், விஜயலட்சுமி நகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் நாளை காலை மின்சாரம் இருக்காது.
சென்னையில் ஜனவரி 3ம் தேதியான நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஐயப்பன்தாங்கல், கோவிலம்பாக்கம் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும். மின்சாரம் துண்டிக்கப்படும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2 மணிக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "ஐயப்பன்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்துராபுரம், ஸ்ரீநகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், ஸ்வர்ணபுரி நகர், அடிஷன் நகர், சீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நோம்பல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, ஆட்கோ நகர், ஐயப்பன்தாங்கல், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், வசந்தம் நகர், சிவராம கிருஷ்ணா நகர், விஜயலட்சுமி அவென்யூ.
கோவிலம்பாக்கம்: ராகவா நகர் (எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு), பால்வாடி, மேடவாக்கம் மெயின் ரோடு, கடப்பாக்கல், வைத்தியலிங்கம் நகர், ராஜிவி நகர் 6-வது தெரு, அப்பல்லோ விடுதி, ஸ்ரீராம் பிளாட், ஏ.ஆர்.ஆர் பிளாட், நாஞ்சில் பிளாட், தினகரன் தெரு, மணியம்மை தெரு, வெள்ளக்கல் பஸ் ஸ்டாண்ட், கண்ணதாசன் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, காந்தி தெரு, பொன்னியம்மன் காலடி 1 முதல் 5-வது தெரு, கலைஞர் நகர், வீரபாண்டி நகர் 1 முதல் 10-வது தெரு, ராணி நகர், அம்பேத்கர் சாலை, முத்தையா நகர், விவேகானந்தர் தெரு, ராஜீவ் காந்தி நகர், பெருமாள் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்" இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ளவர்கள், கோவிலம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள், குழம்பு மற்றும் சட்னி அரைப்பது, தண்ணீருக்காக மோட்டார் போடுவது போன்றவற்றை காலை 9 மணிக்கு முன்பே செய்துவிட்டால் சிறப்பானதாக இருக்கும். அல்லது மின்சாரம் வரும் வரை காத்திருக்க வேண்டியது வரும்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications