பாஜக விடாது போலயே.. புர்கா போட்ட பெண்கள்.. வாக்களிக்க வந்தால் சோதனை பண்ணுங்க.. திக் கோரிக்கை!
சென்னை: இஸ்லாமியர் பெண்கள் புர்கா அணிந்து வாக்களிக்க வந்தால் அவர்களை சோதனை செய்ய வேண்டும் என்று பாஜக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பாஜகவின் டெல்லி பிரிவு புதன்கிழமை தலைமைத் தேர்தல் அதிகாரியை (CEO) சந்தித்து, வாக்களிக்கும் போது பர்தா அணிந்த பெண்களின் சரியான சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும் என்று கோரியது.

டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் அஜய் மஹாவர், மோகன் சிங் பிஷ்த், மாநிலச் செயலர் கிஷன் ஷர்மா, வழக்கறிஞர் நீரஜ் குப்தா ஆகியோர் அடங்கிய குழு புதன்கிழமை தில்லி தலைமைச் செயல் அதிகாரியை சந்தித்து, பர்தா அணிந்து டெல்லியில் வாக்களிக்க வரும் பெண் வாக்காளர்களை முறையாகச் சரிபார்க்கக் கோரி மனு ஒன்றைச் சமர்ப்பித்தது.
மே 25ல் வாக்குப்பதிவு நடக்கும் போது புர்கா அணிந்து வரும் பெண்களை சோதனை செய்ய வேண்டும் என்று பாஜக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பாஜகவின் இந்த குழுவிற்கு தலைமை தாங்கிய மஹாவர், "புர்கா அல்லது மாஸ்க் அணிந்து வாக்களிக்க வருபவர்கள் முழுமையான விசாரணைக்கு பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். பெண் அதிகாரி அல்லது பெண் போலீஸ் அதிகாரி அவர்களின் முகத்தை சரிபார்க்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
டெல்லிக்கு அண்டை மாநிலங்களில் இருந்து வந்து எந்த வித போலியான அல்லது மோசடியான வாக்களிப்பும் இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். யாரும் போலியாக வாக்களிக்க கூடாது. அதை அனுமதிக்க மாட்டோம். எந்தவிதமான போலி வாக்களிப்பையும் அனுமதிக்க மாட்டோம், என்று டெல்லி பாஜக பிரதிநிதிகள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்து உள்ளனர்.
சோதனை: முன்னதாக லோக்சபா 4ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா 'சரிபார்த்த' சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்க சொல்லி.. முகத்தை காட்டு என்று இவர் மிரட்டி உள்ளார்.
அவர்களை மிரட்டி முகத்தை பார்த்த பின்பே வாக்களிக்க மாதவி லதா அனுமதித்தார். இதை போலீசாரும் கூட வேடிக்கை பார்த்துள்ளனர். தேர்தல் அதிகாரிகளும் இதை வேடிக்கை பார்த்து உள்ளனர். அங்கே இருந்த இஸ்லாமிய பெண்கள் எல்லோரையும் பெயரை கேட்டு, ஆதாரில் உள்ள போட்டோவை பார்த்து பின்னர் அவர்களின் முகத்தை ஹிஜாப்பை தூக்கி காட்ட சொல்லி அதன்பின்பே அனுமதித்தார்.
இப்போது அதை பின்பற்றி இஸ்லாமியர் பெண்கள் புர்கா அணிந்து வாக்களிக்க வந்தால் அவர்களை சோதனை செய்ய வேண்டும் என்று பாஜக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பாஜக முஸ்லீம்: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக இந்து - முஸ்லீம் இடையே பிரிவினை தொடர்பான கருத்துக்களை தீவிரமாக பேசி வருகிறது. கடந்த தேர்தல்களில் அடிமட்ட அளவில் பேசப்பட்ட கருத்துக்கள் இந்த முறை மேல்மட்ட அளவில் பேசுபொருளாகி உள்ளது.
உதாரணமாக பிரதமர் மோடியே இந்த முறை இஸ்லாமியர்கள் குறித்து மேடைக்கு மேடை பேசும் நிலை ஏற்பட்டு உள்ளது. இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு கொடுக்க போகிறது,. உங்கள் வேலை போக போகிற , ராமர் கோவிலை மூட போகிறார்கள், உங்கள் வீட்டு மாடுகளை இஸ்லாமியர்களுக்கு கொடுக்க போகிறார்கள் என்றெல்லாம் மோடி பேசி வருகிறார்.
சில கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளில் இல்லாததை கூட இருப்பதாக கூறி மோடி பேசி வருவது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மோடியே இப்படி பேசுவதால் கீழ் மட்டத்திலும் நிர்வாகிகள் கடுமையாக இஸ்லாமியர்களுக்கு எதிராக பேச தொடங்கி உள்ளனர்.
தெலுங்கானா தேர்தல்: அதிலும் தெலுங்கானா தேர்தலிலும் இந்து - முஸ்லீம் என்று நேரடியாக பாஜக narrative set செய்தது. அதிலும் தெலுங்கானா லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஹைதராபாத் வேட்பாளர் கே.மாதவி லதா செய்த பிரச்சாரங்கள்தான் அங்கே தேர்தல் பேசுபொருளாக.. தேர்தலின் மையமாக மாறியது. இஸ்லாமியர்களை நேரடியாக தாக்கி அவர் பேசிய விஷயங்கள் எல்லாம் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications