Madhampatty Rangaraj:6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்த ஜாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அறிவித்திருக்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜோய் கிரிசில்டா. ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், கிரிசிச்டா ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும், தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

கோவையைச் சேர்ந்தவர் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ். கோவை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் முக்கிய பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் சமையல் ஆர்டர் எடுத்து செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் செய்து அசத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி அவரது சமையலை பார்த்து புகழ்ந்ததாக கூறியிருந்தார். தொடர்ந்து பல்வேறு யூட்யூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வந்த அவர் விஜய் டிவியில் கால் எடுத்து வைத்தார். விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

Chef Madhampatty Rangaraj Marries Designer Joy Crizildaa

அதற்கு முன் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்திலும் மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து பிரபலமான அவர் நடிகர்கள், அரசியல் பிரபலங்களின் இல்ல திருமண விழாக்கள், அரசியல் மாநாடுகள் என பிரம்மாண்ட விருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்து வந்தார். அதே நேரத்தில் சமையலை விட சமூக வலைதளங்களில் தான் மிகவும் ஆக்டிவாக இருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.

இதற்கிடையே கடந்த சில தினங்களாகவே அவரது தனிப்பட்ட விவகாரங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. தனது முதல் மனைவியை ரங்கராஜ் விவாகரத்து செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது முதல் மனைவியோ, மாதம்பட்டி ரங்கராஜோ, அதனை உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் தான் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜோய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துள்ளார். அதனை தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார் ஜோய் கிரிசில்டா. திருமண கோலத்தில் கோவிலில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள ஜோய் கிரிசில்டா "பேபி லோடிங் 2025.. கர்ப்பமாக இருக்கிறேன்.. ஆறு மாதம் கர்ப்பம்" என பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து வந்த செய்திகள் உறுதியாகி இருக்கிறது.

திருமணத்துக்கு முன்பே ஜோய் கிரிசில்டா கர்ப்பமானதாகவும் அதன் காரணமாகவே இந்த திருமணம் அவசர அவசரமாக மிக எளிமையாக நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் முதல் மனைவியை மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்து செய்தாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஒருவேளை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தால் அவர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு முதலில் ஸ்ருதி என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. ஒரு சில காரணங்களால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக தகவல் பரவியது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, "நான் தான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி" என ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்ட தகவல் பரவி வரும் நிலையில் ஸ்ருதியின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+