முழு கொள்ளளவை வேகமாக நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி.. நீர் மட்டம் 24 அடிக்கு 20 அடியாக உயர்வு
சென்னை: கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. இதனால் எந்த நேரத்திலும் நிரம்பும் நிலையில் ஏரி உள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 20 அடியை தாண்டியது. முழு கொள்ளளவான 24 அடியை வேகமாக நெருங்குகிறது ஏரி. தற்போது நீர்மட்டம் 20 அடியை தாண்டியதால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் யாரும் ஏரிக்கு செல்லாத வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். எந்த நேரத்திலும் நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.
ஏரியின் நீர் மட்டம் 21 அடியை எட்டியதும் தண்ணீர் திறக்கப்படும் என தெரிகிறது. இந்த பருவமழைக்குள் நிச்சயம் அந்த ஏரி நிரம்பி வரும் கோடையில் இதமான கோடையாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மக்களோ கடந்த 2015 இல் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததால் நகர் முழுவதும் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அது போல் இந்த முறை நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications