மாமல்லபுரம் முதல் செங்கல்பட்டு வரை.. சாலையில் நாட்டியம்.. விநாயகா நாட்டியாலயா மாணவர்கள் உலக சாதனை
சென்னை: செங்கல்பட்டு வேதாச்சலம் நகா் விநாயகா நாட்டியாலயா பள்ளியின் 25-ஆம் ஆண்டு விழாவையொட்டி அப்பள்ளியில் பழைய, புதிய மாணவா்கள் மாமல்லபுரம் முதல் செங்கல்பட்டு வரை 35 கி.மீ. சாலையில் நடனமாடி வந்து இரண்டாவது முறையாக உலக சாதனை படைத்துள்ளனா்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ளது விநாயகா நாட்டியாலயா பரத நாட்டிய பயிற்சியகம், தங்கள் பயிற்சி பள்ளியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உலக சாதனை படைக்கும் நோக்கில் கடந்த வாரம் 100க்கும் மேற்பட்ட நாட்டியாலயா மாணவியர், பரத நாட்டிய நடனமாடியபடியே மாமல்லபுரம் - செங்கல்பட்டு இடையே, 35 கி.மீ., சென்றனர்.

அமெரிக்க நாட்டின் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் என்ற அமைப்பின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் அருகில் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அமைப்பின் பதிவாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட், நாட்டியாலயா நிறுவனர் மீனாட்சிபிரியா ராகவன் காலை 5:10 மணிக்கு, இந்நாட்டிய நிகழ்வை துவக்கி வைத்தனர். ஓம் சம்போ சுயம்போ என்று பாடல் ஒலிக்க மாணவிகள் நாட்டியமாடிச் சென்றது பலரையும் கவர்ந்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடனப் பள்ளியின் நிர்வாக இயக்குநர் மீனாட்சிபிரியா ராகவன் கூறியதாவது: நான் என்னுடைய 3 வயதிலேயே முறையாக பரத நாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். நாம் பெற்ற கலையை பலருக்கும் கற்றுத்தரும் நோக்கில் 25 ஆண்டுகளுக்குமுன் இந்த விநாயகா நாட்டியாலயா பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினேன். மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளும் ஆர்வமாய் பரத நாட்டியத்தை ஈடுபாட்டோடு கற்றுக் கொள்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக பரத நாட்டியத்தில் ஏதாவதொரு சாதனையை செய்ய வேண்டு மென திட்டமிட்டோம். இதற்காக இடைவிடாத முயற்சி மேற்கொள் ளப்பட்ட நிலையில் மாணவர்களின் ஒத்துழைப்பும் இணைந்ததால் சாதனை நடன நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த நாட்டிய பள்ளி மாணவிகள் ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 6ஆம் தேதி வரை தொடர்ந்து 150 மணி நேரம் 250 மாணவர்கள் 1650க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனமாடி சாதனை படைத்துள்ள நிலையில் மாமல்லபுரத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு தொடங்கி தொடா்ந்து 8 மணி நேரம் சுமாா் 35 கி.மீ. தொலைவு ஓய்வெடுக்காமல் நடனம் ஆடியபடியே செங்கல்பட்டு வந்தடைந்து உலக சாதனை படைத்துள்ளனா். ஓய்வின்றி நடனமாடி உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் நாட்டியப்பள்ளி நிறுவனா் மற்றும் நடன சிகாமணி மீனாட்சி பிரியா ராகவனுக்கும், மாணவ மாணவிகளுக்கும் உலக சாதனை யூனியன் அலுவலக மேலாளா் கிறிஸ்டோபா் டெயிலா் உலக சாதனைக்கான பட்டயத்தை வழங்கினாா்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications