சென்னை பல்லாவரத்தில் வீடு வாங்க போறீங்களா.. கவனம் மக்களே.. ஹைகோர்டில் அரசு அளித்த உறுதியை பாருங்க
சென்னை: சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஏரியை ஆக்கிரமித்து ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பல்லாவரம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு கலெக்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்த பல்லாவரம், இன்று தாம்பரம் மாநகராட்சியின் முக்கியமான பகுதியாக இருக்கிறது. சென்னைக்குள் இருந்தாலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் தான் வருகிறது. இங்குள்ள அரசு நிலங்கள் பராமரிப்பு, நீர் நிலைகள் பராமரிப்பு உள்பட நிர்வாக ரீதியாக அனைத்து பணிகளும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் இருக்கிறது.

கிண்டியை தாண்டி உள்ள பரங்கிமலையே செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் கீழ்தான் வருகிறது. அந்த வகையில் பல்லாவரம் பகுதியில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்த காரணத்தால் ஆக்கிரமிப்புகளும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
இந்நிலையில் பல்லாவரம் 13-வது வார்டு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எஸ்.பி.காந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், 'பல்லாவரம் ரயில்நிலையம் அருகே உள்ள ஏரியை ஆக்கிரமித்து ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஏரியின் அருகே ரூ.1¼ கோடி செலவில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த தாம்பரம் மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. ஆனால் பல்லாவரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றாமல் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தினால் அது எந்தவகையிலும் மக்களுக்கு பயன் இல்லாமல் போய்விடும். அதுமட்டுமல்லாமல் மழை நீர் கட்டமைப்புக்காக செலவிடப்படும் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிவிடும். எனவே, பல்லாவரம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'சென்னை பல்லாவரம் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் இந்த பணி அடுத்த 4 மாதத்துக்குள் முடிந்து விடும். எனவே இந்த பணி முடிந்ததும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' இவ்வாறு உறுதி அளித்தார். செங்கல்பட்டு கலெக்டரின் பதில் மனுவை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
சென்னை பல்லாவரம் ஏரியை பொறுத்தவரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்து வருகிறது. ரேடியல் சாலை மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்ட நிலையில், அரசு விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினால் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரம்அரசு நிலங்களை ஆக்கிரமித்த பலர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். எனவே பல்லாவரம் நீர்நிலை ஆக்கிரமிப்பாக வகைப்படுத்தப்பட்ட நிலங்களை மறந்தும் வாங்கிவிட வேண்டாம். பின்னாளில் சிக்கலுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
குன்னம், பல்லாவரம் தொகுதிகளில் வேட்பாளர்கள் யார்! அறிவித்தார் பாரிவேந்தர் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications