சென்னை அருகே மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பறிப்பு ஏன்? செங்கல்பட்டு கலெக்டர் அதிரடி
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவராக வீராசாமி என்பவர் 2021-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னிச்சையாக செயல்படுவது, ஊராட்சி நிதியில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னையை ஒட்டியுள்ள ஊராட்சிகள் எல்லாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சிகளில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்டது. இது ஒரு புறம் எனில், அங்குள்ள பல ஊராட்சிகளில் நகராட்சிக்கு நிகராக மக்கள் தொகை உயர்ந்து விட்டது.

இதனால் அங்கு சாலை வசதி, குடிநீர் வசதி, குப்பைகள் அகற்றும் வசதி, தெருவிளக்கு, பூங்கா, பாதாள சாக்கடை வசதி, ரேஷன் கடை, சமூக நலக்கூடங்கள் உள்பட பல்வேறு வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டியதாக இருக்கிறது. இதற்காக அங்கு நிதி ஒதுக்கீடும் அதிகமாக உள்ளது. இந்நிலையில ஒரு சில ஊராட்சிகளில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அந்த விவகாரத்தில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவராக வீராசாமி என்பவர் 2021-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து துணைத் தலைவராக லோகேஸ்வரி என்பவர் தேர்வானார். இந்த நிலையில் தன்னிச்சையாக செயல்படுவது, ஊராட்சி நிதியில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி வரப்பெற்ற புகார் மனுவின் மீது செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் நிதி செலவினத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, இதுகுறித்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களின் விளக்கத்தை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் ஊராட்சி கணக்குகள் முடக்கப்பட்டன.
இதனால் 31.8.2023 அன்று காசோலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கையெழுத்திடும் அதிகாரம், பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைவர் மீது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் இது குறித்து வண்டலூர் தாசில்தார் விசாரணை மேற்கொண்டு மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து மாம்பாக்கம் ஊராட்சி தலைவரின் பதவியை நீக்கக்கோரி, கவுன்சிலர்கள், ஊரக வளர்ச்சி துறை கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தனர். இதுசம்பந்தமாக விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது. இந்நிலையில் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கத்திற்கான அறிக்கை, தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications