சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாய் பிடிக்கும் நகராட்சி வாகனத்தில்.. மக்களுக்கு கொரோனா பரிசோதனை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: செங்கல்பட்டு நகராட்சியில் நாய் பிடிக்கும் வாகனத்தில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Recommended Video

    நாய் பிடிக்கும் நகராட்சி வாகனத்தில்.. மக்களுக்கு கொரோனா பரிசோதனை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி - வீடியோ

    செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் சென்னைக்கு அடுத்த படியாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் மாறி வருகிறது.

    Chengalpattu municipality conducted corona test on dog catching vehicle

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொத்து கொத்தாக கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

    இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் கொரோனா எண்ணிக்கையை குறைக்க சரியான முறையில் செயல்படுவது இல்லை. அதிலும் கொரோனா தொற்று கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பற்றாக்குறையால் நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்காக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    Chengalpattu municipality conducted corona test on dog catching vehicle

    கொரோனா பரிசோதனை செய்ய பணியாளர்களுக்கு போதிய வசதிகள் செய்து தராததால் நாய் பிடிக்கும் வாகனத்தில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    Chengalpattu municipality conducted corona test on dog catching vehicle

    கொரோனா பரிசோதனை செய்ய முறையாக முகாம் அமைத்து மருத்துவர்கள் செயல்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    English summary
    People in Chengalpattu municipality are shocked to see that a corona test was conducted on a dog-catching vehicle.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X