Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென் மாவட்டங்களுக்கு போறீங்களா? இனி துள்ளி குதிக்கும் செங்கல்பட்டு.. உங்க பயண பிளானே அடியோடு மாறும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் சுமார் 40% நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் (CMDA) சார்பில் ₹150.05 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் 15, 2023 அன்று தலைமைச் செயலகத்தில் அடிக்கல் நாட்டினார்.

இந்த ₹150.05 கோடி மதிப்பீட்டில், செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம், இரத்த சுத்திகரிப்பு மையம், உள்விளையாட்டு அரங்கம், பூங்கா மேம்பாடு மற்றும் காசிமேடு கடற்கரை பகுதி மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை அடங்கும். இவற்றில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையப் பணிகளும் அடங்கும். இந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

kilampakkam bus

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம்

சென்னை பெருநகர் பகுதியின் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் 1972-ல் மெட்ராஸ் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நிறுவப்பட்டது. பின்னர், 1975-ல் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ் இது சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்பட்டது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், நகர்ப்புற மேம்பாட்டுக் கொள்கைகளை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை CMDA மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கத்தில் ₹97 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. அம்பத்தூர் பேருந்து நிலைய மேம்பாட்டிற்கு ₹13.85 கோடி, கொண்டித்தோப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையத்திற்கு ₹11.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேடு சாலை சந்திப்பில் ₹10.30 கோடியில் புதிய பூங்கா, மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோவில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் ₹8.75 கோடியில் உள்விளையாட்டு அரங்கம், காசிமேடு கடற்கரை மேம்பாட்டிற்கு ₹8.65 கோடி என மொத்தம் ₹150.05 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத் தலைவருமான திரு. பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. அன்சூல் மிஸ்ரா, இ.ஆ.ப., ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய பேருந்து நிலையம் சுமார் ₹40 கோடி

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்த நிலையில், செங்கல்பட்டில் மற்றொரு புதிய பேருந்து நிலையப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் புதிய பேருந்து நிலையம் சுமார் ₹40 கோடி செலவில் அமைய உள்ளது.

செங்கல்பட்டு பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையினாலும், சென்னைப் பெருநகரப் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலினாலும், செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையத்தின் அவசியம் அதிகரித்துள்ளது. இதனால் இந்தப் புதிய பேருந்து நிலையம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் வகையில், வெண்பாக்கம் ஊராட்சிக்கு அருகே 14 ஏக்கர் பரப்பளவில் இந்த ₹40 கோடி மதிப்பீட்டிலான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+