மதுரவாயலை விடுங்க.. செங்கல்பட்டு டூ சென்னை பீச்சில்..குளுகுளுனு ஓடப்போகும் AC ரயில்.. எப்போ தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வரப்போகின்றனவா? எப்போது தெரியுமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
சென்னையில் ரயில்சேவையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.. இதில், தாம்பரம்-கடற்கரை இடையே 4 ரயில்பாதைகளும், எழும்பூர் - சென்னை கடற்கரை வரை 3 வழித்தடங்களும் உள்ளன.. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் வட மாநில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன

சென்னை: மொத்தத்தில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - காஞ்சிபுரம், சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி போன்ற வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன..

Chengalpattu to Chennai Beach Station and When are AC coaches ready for Chennai suburban trains

இதில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் AC பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்து வேறு எந்த அறிவிப்பும் வெளியாகிவில்லை.. எனவே, இதுகுறித்து சாத்தியக்கூறு ஆய்வை நடத்த வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருக்கிறது.

அதிகாரிகள்: இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொன்னபோது, சென்னையில் புறநகர் வழித்தடங்களில் ஏசி ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் தயாராக இருக்கிறது என்றாலும், பெட்டிகள் தயாராக இருக்கும்போது மட்டுமே அவற்றை அறிமுகப்படுத்த முடியும்..

பெரம்பூர் ஐசிஎப்பில்தான், இந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க வேண்டும்... இப்போதைக்கு, மும்பை புறநகர் ரயில்களுக்காக தானியங்கி கதவுகளுடன் கூடிய ஏசி புறநகர் ரயில்களை ஐசிஎப் தயாரித்து கொண்டிருப்பதால், இனிமேல்தான் சென்னைக்கான ஏசி பெட்டிகளை தயார் செய்ய வேண்டும்..

நம்பிக்கை: 2022ம் ஆண்டு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி ரயில்களை இயக்க ரயில்வேயுடன் ஒத்துழைக்க தமிழக அரசு விருப்பம் தெரிவித்திருந்தது. எனினும், ஒன்றிரண்டு AC பெட்டிகளை வைத்திருப்பது சாத்தியமில்லை... மொத்த ரயிலுமே ஏசி செய்யப்பட வேண்டும்... இதற்கு செலவும் அதிகரிக்கும்... எனவே, கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர சற்று தாமதமாகும்" என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+