நம்ம சென்னையா இது? வாக்குப்பதிவில் அடித்து தூக்கிய 16 தொகுதிகள்.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. சென்னையில் எப்போதும் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகும். ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக சென்னையில் 83.21 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் எப்போதும் வாக்குப்பதிவுகள் குறைவாகவே இருக்கும். சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என இரண்டிலும் வாக்குகள் குறைந்த அளவில் மட்டுமே பதிவாகும். ஆனால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக சென்னையில் அதிகப்படியாக வாக்குகள் பதிவாகி உள்ளது.

சென்னையில் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாலை 6 மணி நிலவரப்படி சென்னையில் 83.21 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளது. தொகுதி வாரியாக பார்த்தால் ஆர்கே நகரில் அதிகபட்சமாக 90.50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 2வது இடத்தில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சம் என்றால் மயிலாப்பூர் தொகுதியில் 74.88 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. தொகுதி வாரியாக எந்தெந்தெந்த இடங்களில் எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளது? என்ற விவரம் பின்வருமாறு:
ஆர்கே நகர் - 90.50 சதவீதம்
பெரம்பூர் - 89.79 சதவீதம்
கொளத்தூர் - 86.11 சதவீதம்
வில்லிவாக்கம் - 86 சதவீதம்
திருவிக நகர் - 78.70 சதவீதம்
எழும்பூர் - 85.55 சதவீதம்
ராயபுரம் - 79.34 சதவீதம்
துறைமுகம் - 82.75 சதவீதம்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - 84.34 சதவீதம்
ஆயிரம் விளக்கு - 83.09 சதவீதம்
அண்ணா நகர் - 85.64 சதவீதம்
விருகம்பாக்கம் - 85.49 சதவீதம்
சைதாப்பேட்டை - 77.84 சதவீதம்
தியாகராயநகர் - 83.55 சதவீதம்
மயிலாப்பூர் - 74.88 சதவீதம்
வேளச்சேரி - 84.50 சதவீதம்
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சென்னையில் 56.59 சதவீத வாக்குகள் மட்டும் தான் பதிவாகி இருந்தது. அப்போது மொத்தம் 59 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையால் வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சமாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications