5-ஸ்டார் ஓட்டலில் பெண்ணை ரூமுக்கு அழைத்த பிரபலம்.. சென்னை பாரில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மது பார்களை இரவு 11 மணிக்கு மேல் திறக்கக் கூடாது. நட்சத்திர ஓட்டல்களை 12 மணிக்கு மேல் திறக்கக் கூடாது என்ற உத்தரவு சென்னையில் பிறக்கப்பட்டுள்ளது.. எனினும், இதனை மீறி சில பார்கள் செயல்படுவதாக தெரிகிறது.. எனவே சென்னையில் அனுமதித்த நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

போதையில் பெண்ணை ரூமுக்கு அழைத்த விவகாரத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் பாரில் 2 குரூப்கள் திடீரென மோதிக் கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chennai 5 Star Hotel Bar Woman

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டல் தாஜ் ஆகும்.. இங்கு 2 தரப்பினருக்கும் தகராறு நடப்பதாக நேற்று அதிகாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசுக்கு இந்த தகவலை தந்தது ஓட்டல் மேனேஜர் பிரபு ஆவார்.

தாஜ் ஓட்டல்

இதனால் போலீசார் விரைந்து தாஜ் ஓட்டலுக்கு சென்றனர்.. அங்கே இரு தரப்பினரிடமும் நடந்து கொண்டிருந்த அடிதடியை தடுத்து நிறுத்தினார்கள். இந்த மோதலில் ரத்த காயத்தில் விழுந்து கிடந்த 2 நபர்களையும் மீட்டனர்.. பிறகு இந்த மோதல் தொடர்பான விசாரணையை துவங்கினார்கள்.

அப்போதுதான், பெண் விவகாரத்தில் இந்த சண்டை நடந்தது தெரியவந்தது. அதாவது மாமல்லபுரத்தை சேர்ந்தவர்கள், வின்ஸ்டன் பிரபு (37), அவரது தம்பி திவாகர் அரவிந்த் (35). இவர்கள் இருவருமே, மாமல்லபுரத்தில் ஐடியல் பீச் ரிசார்ட்டை வைத்து நடத்தி வருகிறார்கள்.

நுங்கம்பாக்கம் ஓட்டல்

இவர்களது நண்பரின் மனைவிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் வளைகாப்பு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் நண்பர்கள் கீழ்ப்பாக்கம் பிகேஆர் புரொடக்‌ஷன் உரிமையாளரான பிரனே (30), சாப்ட்வேர் கம்பெனி ஓனர் ஜெயபிரகாஷ் (36), மெடிக்கல் கம்பெனி பாஸ்கர் (35) உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.. வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்ததுமே, ஓட்டலில் உள்ள பாருக்கு சென்று அனைவருமே மது குடித்துள்ளார்கள்.

ஸ்டார் ஓட்டல் ரூம்

இதே பாரில் கொளத்தூரைச் சேர்ந்த அரவிந்தன் (29) என்பவர் தன்னுடைய மனைவி, மனைவியின் தோழி மற்றும் ஒரு திருநங்கையுடன் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.. இதில், அரவிந்தனின் மனைவியின் தோழி, வின்ஸ்டன் பிரபுவுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது.

இதனால் வின்ஸ்டன் பிரபு, அந்த தோழியிடம் சென்று பேசியிருக்கிறார்... வின்ஸ்டனை தொடர்ந்து அவருடன் வந்த நண்பர்களும், அந்த பெண்ணிடம் பேசியுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து வின்ஸ்டன் அந்த பெண்ணிடம், "அனைவரும் சேர்ந்து 5வது மாடியில் ரூம் புக் செய்துள்ளோம். வாருங்கள்" என்று அழைத்துள்ளார்.. ஆனால் போதையில் இருந்த அந்த பெண்ணோ, ரூமுக்கு வர மறுத்து விட்டார். இதனால் வின்ஸ்டனுக்கும், அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பு வரை சென்றது.

பெண்ணுக்காக மல்லுக்கட்டிய 2 தரப்பு

இதனால் அப்பெண் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த விஷால் கணேஷ் (26), குரோம்பேட்டையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (25) என்ற தன்னுடைய இரு நண்பர்களையும் போனை போட்டு அழைத்துள்ளார். கணேஷ், முத்துக்கிருஷ்ணன் இருவருமே வழக்கறிஞர்கள் ஆவர்.

ஓட்டலுக்கு வந்த வழக்கறிஞர்கள் இருவரும், ஏன் பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் என்று வின்ஸ்டனிடம் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் பாட்டிலால் தாக்கிக் கொண்டனர். இதில், வின்ஸ்டன் பிரபுவுக்கு நெற்றியிலும், அரவிந்தனுக்கு கழுத்து, தலையிலும் ரத்த காயத்தில் விழுந்தனர்.

புழல் ஜெயிலில் அடைப்பு

இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, வின்ஸ்டன் பிரபு, திவாகர் அரவிந்த், பிரனே, ஜெயபிரகாஷ், பாஸ்கர், அரவிந்தன், விஷால் கணேஷ், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 8 பேரையும் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இறுதியில் அவர்கள் அனைவருமே புழல் ஜெயிலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் ஏற்கனவே இப்படித்தான் 2 கோஷ்டிகள் மோதிக் கொண்டதில், தூண்டில் ராஜா, அதிமுக பிரமுகர் பிரசாத், அஜய் ரோகன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தியபோதுதான், போதைப்பொருள் கும்பலுடன் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு தொடர்பிருந்ததாக தெரியவந்தது, அவர்கள் கைதானது நினைவிருக்கலாம்.

கமிஷனர் அருண் சபாஷ்

சென்னையில் 11 மணிக்கு மேல் ஸ்டார் ஓட்டல்களில் பார் திறக்கக்கூடாது என்று போலீஸ் கமிஷனராக அருண் அதிரடியாக உத்தரவிட்டு, அந்த உத்தரவு தற்போது அமலிலும் உள்ளது. அதனால்தான், இரவு நேரங்களில் மோதல்கள் வெகுவாக குறைந்துள்ளன. எனினும், ஓரிரு சம்பவங்கள் நேற்றைய தினம் போல நடந்துவிடுகின்றன.

இத்தனைக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்காக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பரிந்துரை செய்தார்களாம்.. ஆனாலும், கமிஷனர் அருண் இரும்புக்கரம் கொண்டு, இரவு நேர மோதல்களை ஒடுக்குவதில் உறுதியாக உள்ளார்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+